பேசிக் (நிரல் மொழி)
நிரலாக்க மொழிக் குடும்பம்
பேசிக் (BASIC) துவக்கத்தில் உருவாக்கப்பட்ட நிரல் மொழிகளில் ஒன்றாகும். தட்டச்சுக் கருவியை உள்ளடக்கிய கன்சோல் இரக கணினிகளில் முதன்முதலாக நிரல் மொழியாக பயன்படுத்தப்பட்டது. பேசிக் என்பது Beginner's All-purpose Symbolic Instruction Code என்ற ஆங்கில சொற்றொடரின் முதல் எழுத்துக்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுருக்கச் சொல்லாகும்.
வரலாறு
தொகுஇதனை 1963ஆம் ஆண்டில் ஜான் கெமெனியும் தாமஸ் குர்ட்சும் கீழ்கண்ட எட்டு கொள்கைகளை பின்பற்றுமாறு வடிவமைத்தனர்:[1]
- புதியவர்களுக்கும் எளிதாக இருக்க வேண்டும்.
- பொதுப்பயன் நிரல் மொழியாக இருக்க வேண்டும்.
- பட்டறிவுபெற்ற நிரலாளர்களுக்கு கூடுதல் சிறப்புக்கூறுகளை சேர்க்கக் கூடுமானதாக இருக்க வேண்டும்.
- ஊடாட வல்லதாக இருக்க வேண்டும்.
- தெளிவான தோழமையான பிழை சுட்டும் செய்திகள்
- சிறிய கணினிநிரல்களுக்கு விரைவான முடிவுகள்
- கணினி வன்பொருள் குறித்த எந்த அறிவும் தேவைப்படாதிருத்தல்
- பயனர் இயக்குதளத்தை தொகுப்பதை தடுப்பது.
இதனை உருவாக்கியோர் நிரலாளர்கள் தங்கள் மொழியை பயன்படுத்த ஆர்வம் கொள்வதற்காக இதற்கான நிரல்மொழிமாற்றியை இலவசமாக வழங்கினர். இதனை அடுத்து பெருமளவில் பல நிரல்மொழிமாற்றிகள் உருவாக்கப்பட்டன.
மேற்கோள்
தொகு- ↑ "Thomas E. Kurtz - History of Programming Languages". Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.