பேச்சி

(பேச்சியம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேச்சி தமிழக கிராமங்களில் வழிபடும் ஒரு பெண் காவல் தெய்வம். இவரை பேச்சியம்மன் என்றும் அழைக்கின்றனர். தென்மாவட்ட மக்கள் அதிகம் வழிபட்டாலும், தமிழ்நாடு முழுக்க பேச்சிக்கு கோவில்கள் இருக்கின்றன.

பேச்சியின் மறுபெயர்கள்

தொகு
  • பேச்சி
  • பேச்சியம்மன்
  • பேச்சியாயி

வழிபாடு

தொகு

பொங்கல் வைத்து பூசை செய்யப்படுகிறது. பல இடங்களில் சைவ வழிபாடு என்றாலும், சில இடங்கள் ஆடு வெட்டியும் பூசை நடத்துகின்றார்கள்.

பிறப்பின் போதே பேச்சாற்றல் வராமல் பாதிக்கப்பட்டவர்களும், திக்கி திக்கி பேசுபவர்களும் பேச்சியை வழிபாடு செய்தால் குறை தீரும் என்பது நம்பிக்கை.

பே(ய்)ச்சியம்மன்

தொகு

'பேச்சியம்மன்' என்பது 'பே(ய்)ச்சியம்மன்' என்பதின் திரிந்த வடிவமாக கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பேய் மகளிர் குறித்த பதிவுகள் இருக்கின்றன.

"பிணக்கோட்ட களிற்றுக் குழம்பி னிணம்வாய்ப் பெய்த பேய்மகளி ரினையொலி யிமிழ் துணைங்கைச் சீர்ப் பிணை யூப மெழுந்தாட வஞ்சு வந்த போர்க்களம்" (மதுரைக்காஞ்சி 24 -28)

"போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களையுடைய யானைப் பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறைதலைப் பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள்" என்று பாடுகிறார் மாங்குடி மருதனார். புறநானூற்றிலும் இவை மிகுதியாகக் காணப்படுகிறது.

"பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்" என காரைக்கால் அம்மையார் குறித்து திருத்தொண்டர் தொகை போற்றுகிறது.

"பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதை கூறுவதையும் நோக்கலாம். எனவே பேய் மகளிர்க்கும், பிணத்திற்குமான தொடர்பு சங்க காலம் தொட்டு நீடித்து வந்துள்ளது எனவும் கருதுகிறார்கள். [1]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. [http://www.keetru.com/semmalar/apr09/c_thangavel.php "வழக்காறுகளினூடே வரலாற்றைத்தேடி...." -தி. தங்கவேல்]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சி&oldid=3235701" இலிருந்து மீள்விக்கப்பட்டது