பேச்சு:அகழ்பொறி

தோண்டி எனலாமா? சுருக்கமாகவும் பேச்சு வழக்கில் உள்ளது போலவும் இருக்கும்.--ரவி 16:13, 28 ஆகஸ்ட் 2008 (UTC)

ஆமாம். பாக்கு வெட்டி போல. --சிவக்குமார் \பேச்சு 16:16, 28 ஆகஸ்ட் 2008 (UTC)
தோண்டி என்பதற்கு பானை என்ற பொருள் உண்டு. மயூரநாதன் 17:31, 28 ஆகஸ்ட் 2008 (UTC)
பானை என்னும் பெயர் இருந்தாலும், பல பொருட்களைத் தரும் ஒரு சொற்கள் தமிழில் நிறையவே உண்டுதானே. வேண்டாம் என்றால், அகழுந்து, தோண்டுந்து, அகழ்வி என்று ஏதேனும் ஒன்றை ஆளலாம். கல்லுதல் என்றாலும் தோண்டுதல் என்னும் பொருள் உடையதே. முன்னொரு முறை சிவக்குமாரோ, சுந்தரோ வேளாண்மை பற்றிய சொற்கள் கேட்டபொழுது, அகழுந்து என்னும் சொல்லைப் பரிந்துரைத்ததாக நினைவு. தமிழ்நாட்டில் தோண்டி என்பது மாழையால் (உலோகத்தால்) ஆன குடம் அல்லது இருப்பு சட்டியைக் குறிக்கும் (இருப்புச் சட்டியை சென்னையில் ஒருகாலத்தில் கடாய் என்றும் அழைப்பர்). --செல்வா 17:43, 28 ஆகஸ்ட் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகழ்பொறி&oldid=282403" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அகழ்பொறி" page.