பேச்சு:அடோபி விளாசு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

சொல்லுக்கு முதலில் ஆய்த எழுத்து வர முடியாதென பேச்சு:தெமாகு பெரிய பள்ளிவாசல் பக்கத்திற் பார்க்கப்பட்டதல்லவா? அத்துடன் சொல்லின் இறுதியில் பகர மெய்யெழுத்து வரவும் முடியாது.--பாஹிம் (பேச்சு) 03:21, 14 சூலை 2012 (UTC)Reply

Adobe என்பது அடோபி என்றே வாசிக்கப்படும். அடோபி போட்டோசாப்,அடோபி இமேச்ரெடி என்று கட்டுரைகளும் உண்டு. ஆகவே அடோப் என்பதை அடோபி என்றே மாற்றிவிடலாம் என்பது என் கருத்து. --Prakayas (பேச்சு) 03:32, 14 சூலை 2012 (UTC)Reply

அடோபி விளாசு என்ற தலைப்புக்கு நகர்த்தலாம் என்பது என் பரிந்துரை. --மதனாகரன் (பேச்சு) 04:01, 14 சூலை 2012 (UTC)👍 விருப்பம்--பாஹிம் (பேச்சு) 04:21, 14 சூலை 2012 (UTC)Reply

நகர்த்தப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 14:30, 14 சூலை 2012 (UTC)Reply

fக்குப் பதில் பகரம் வருவதல்லவா வழமை? எடுத்துக்காட்டு: போன், போட்டோ. சொல்லின் இறுதியில் வரும் ப் p ஒலி தரும் என்பதால் பி என்று மாற்றியது தகும். --இரவி (பேச்சு) 15:03, 14 சூலை 2012 (UTC)Reply

ஆலமரத்தடியில் செல்வாவின் கருத்துகளையும் பாருங்கள். Fஇற்குப் பதிலாக வகரம் வருவது இலங்கை வழக்கில் உள்ளது (எ-டு: விசுக்கோத்து, வசு). Fஇற்குப் பதிலாக வகரத்தையே பயன்படுத்துவது நன்று. --மதனாகரன் (பேச்சு) 15:14, 14 சூலை 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடோபி_விளாசு&oldid=1163864" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அடோபி விளாசு" page.