பேச்சு:அண்ணா நூற்றாண்டு நூலகம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A. in topic Untitled

Untitled தொகு

நான்காவது தளத்தில் உள்ளவை தமிழ் நூல்களா, பன்மொழியா, ஆங்கிலமா? --Natkeeran 03:10, 6 பெப்ரவரி 2011 (UTC)

நான் இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் சென்னை சென்றிருந்த போது இந்த அழகிய பயன்மிகு நூலகத்துக்கும் சென்று சுமார் இரண்டரை மணி நேரங்கள் எல்லா தளங்களுக்குள்ளும் சென்று பார்வையிடேன். தாங்கள் குறிப்பிடும் 4 வது தளம் உட்பட்ட எல்லா 8 தளங்களிலும் (தரைத்தளம் + 7 தளங்கள்) நான் கண்ட பகுதியாக்கங்கள் பின்வரும் வலைப்பதிவில் குறிப்பிட்டவாறுதான்: http://annacentenarylibrary.blogspot.com/2011/02/sections.html

4வது மாடியில் அப்பதிவில் குறிப்பிட்டவாறு பல துறைசார்ந்த ஆங்கில நூல்களைத்தான் கண்டேன். ஆயினும் 4 ஆம் தளத்தில் மட்டும் ஓர் அரைப் பிரிவில் (பொருளாதாரம் மற்றும் சட்டம் சார்ந்த நூல்கள் உள்ள பிரிவு என நினைவில் உள்ளது) உட்செல்ல ஒரு மாணவருக்கான பள்ளி / கல்லூரி அடையாள அட்டை , மாணவர் அல்லாவிடின் ஆய்வுத் தேவைக்காக அனுமதி அளிக்க ஒரு பல்கலைகழக / கல்லூரி விரிவுரையாளர் அல்லது பேராசிரியர் போன்ற அறிஞர் ஒருவரின் பரிந்துரை மடல் கொண்டு வர வேண்டும் என அறிக்கை வைத்திருந்தார்கள். அதனால் அப் பிரிவிற்குள் மட்டும் நான் சென்று பார்க்கவில்லை. --கா. சேது 08:15, 24 திசம்பர் 2011 (UTC)Reply

அவ்வாறான விதி கடுமையாகப் பின்பற்றப்படுவதில்லை. நீங்கள் யாரென்ற விபரம் தெரிவித்தால் போதுமானது. --சூர்யபிரகாசு உரையாடுக... 09:45, 24 திசம்பர் 2011 (UTC)Reply

  அண்ணா நூற்றாண்டு நூலகம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "அண்ணா நூற்றாண்டு நூலகம்" page.