பேச்சு:அதிவேக ஈனுலை

அதிவேக ஈனுலை என ஏன் மாற்றிவிட்டீர்கள். உரையாடிவிட்டாது மாற்றியிருக்கலாம். அதிவேகம் என்பதை விட விரைவு என்பது தான் சரியானதாக இருக்கும். --இராஜ்குமார் (பேச்சு) 12:28, 21 ஏப்ரல் 2013 (UTC)

பொதுவாக இந்தப்பதமே பயன்படுத்தப்படுகிறது. "விரைவு = fast; ஈனல் = breeding/breeder; உலை = reactor" என்பது மிகச்சரியே. ஆனால், பழக்கத்தில் உள்ள மெய்நிகர் வழக்கைப் பயன்படுத்தினால் தேடுவோர்க்கும் எளிதில் புலப்படும் :) உரையாடாமல் மாற்றியதற்குப் பொறுத்தருள்க. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:08, 21 ஏப்ரல் 2013 (UTC)
நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை நண்பா. இதில் நிச்சயம் எனக்கு மாற்று கருத்து உண்டு. அதிவேகம் எனறால் high speed என்ற பொருள் தான் வரும். அதை பழக்கத்தில் வைத்திருந்தால் அதனை விளக்க வேண்டுமே தவிர மேலும் வளர்க்கக் கூடாது என் கருத்து. அப்படியே ஆனாலும் அதிவேக ஈனுலை என்றப் பக்கத்தில் இருந்து விரைவு ஈனல் உலை என்ற பக்கத்திற்கு தான் வழிமாற்று தரவேண்டும். இது தவறாக வழிகாட்டுதல் போல் உள்ளது. --இராஜ்குமார் (பேச்சு) 19:38, 21 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அதிவேக_ஈனுலை&oldid=1407088" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அதிவேக ஈனுலை" page.