பேச்சு:அரசியல் யாப்பு நீதிமன்றம், இலங்கை
1972-1978 காலப்பகுதியில் இலங்கை நாடாளுமன்றம் தேசிய அரசுப் பேரவை என்று கூறப்பட்டது என நினைக்கிறேன். சரி தானா புன்னியாமீன்? அதைப் பற்றியும் கட்டுரையில் குறிப்பிடுவது நல்லது. தேசிய அரசுப் பேரவை பற்றி ஒரு கட்டுரை எழுதினால் இன்னும் நல்லது:).--Kanags \உரையாடுக 07:05, 20 சனவரி 2011 (UTC)
- மிக்க நன்றி Kanags இன்று ஆரம்பிப்பேன்.--P.M.Puniyameen 07:21, 20 சனவரி 2011 (UTC)
அரசியல் யாப்பு நீதிமன்றம் ஆங்கிலத்தில் எவ்வாறு அதிகாரபூர்வமாக எழுதப்படுகிறது? ஆங்கிலச் சொல்லை கட்டுரையின் முதல் வரியில் தருவது நல்லது. Constitutional Council of Sri Lanka என்பது இதனைத் தானா? அல்லது இதனை எவ்வாறு தமிழில் சொல்வார்கள்? அரசியல் நிர்ணய சபை என்று எழுதப்பட்டதாக ஞாபகம்.--Kanags \உரையாடுக 01:54, 24 சனவரி 2011 (UTC)
- தங்களது சந்தேகம் என்னுள்ளும் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. 1ம் குடிரசு யாப்பின் தமிழ்மொழிபெயர்ப்பே என் கைவசமுள்ளது. தமிழ்மொழிபெயர்ப்பில் அரசியல் யாப்பு நீதிமன்றம் என்ற வார்த்தை பிரயோகமே பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதன் சரியான ஆங்கிலப் பதத்தை ஆங்கில மூல அரசியலமைப்பில் பெறுவதே மிகச் சரியானதாக இருக்கும். தேடி நிச்சயமாக தங்களுக்கு அறியத்தருவதுடன், கட்டுரையிலும் இணைப்பேன். --P.M.Puniyameen 04:10, 24 சனவரி 2011 (UTC)
ஆங்கிலத்தில் Constitutional Court எனவே கூறப்பட்டது. http://www.priu.gov.lk/Cons/1978Constitution/ConstitutionalReforms.htm பக்கத்தில் பாருங்கள் பின்வரும் தகவல் காணலாம்: //The Constitution contained a declaration of fundamental rights and freedoms. A special Constitutional Court was provided to test the constitutionality of legislation before enactment. There was no provision for a Judicial Service Commission and a Public Service Commission.//--கா. சேது (பேச்சு) 06:31, 9 நவம்பர் 2012 (UTC)
- Kanags //அரசியல் நிர்ணய சபை// ஐக்கிய முன்னனி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நாடாளுமன்ற (இலங்கைத்தமிழில் பாரளுமன்றம் எனவே கூறப்பட்டது) உறுப்பினர்கள் 1970 - 1972 இருவருட காலத்திற்கு புதிய அரசியல் யாப்பு ஆக்குவதற்காக Constituent Assembly என இயங்கினர். அதுவே தமிழில் "அரசியல் நிர்ணய சபை" என அழைக்கப்பட்டதாக எனக்கு நினைவில் உளது.--கா. சேது (பேச்சு) 06:31, 9 நவம்பர் 2012 (UTC)
- உங்கள் கருத்துக்கு நன்றி சேது. --Kanags \உரையாடுக 23:57, 9 நவம்பர் 2012 (UTC)