அறிவியல் அணுகுமுறை நோக்கிய கட்டுரை த.வி. தேவையா? ஆம். தொகு

கட்டுரையில் உள்ள பேச்சு நடையை களைந்து எழுதுதல் அவசியம் என நினைக்கிறேன். பிறகு, இக்கட்டுரையை பொதுவான ஒரு வர்ணனை கட்டுரையாகத்தான் என்னால் கருத இயலுகிறது. இது போன்ற கட்டுரை தலைப்புகளும் கட்டுரை உள்ளடக்கங்களும் ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம் பெறத்தக்கவை தானா என்பதில் எனக்கு தெளிவில்லை. அனுபவம் உள்ளவர்கள் விளக்கலாம்.--ரவி (பேச்சு) 16:25, 4 செப்டெம்பர் 2005 (UTC)Reply

ரவி, கருத்துக்களுக்கு நன்றி. எழுதிய நடை சறுக்கியிருக்கலாம், சொல்லப்பட்ட பொருள் தெளிவாக கூறப்படாமல் இருக்கலாம், ஆனால் சொல்ல முனைந்த பொருள் நிச்சியமாக தமிழ் விக்கிபீடியாவிற்க்கு அவசியம். உங்களின் கருத்தை வைத்து நான் சொல்ல நினைத்த பொருள் சரியாக சொல்லபடவில்லை என்பது போல தெரிகின்றது. நான் விளக்க முயன்ற பொருள் scientific method. அப் பொருளில் உள்ள ஆங்கில விக்கிபீடியா கட்டுரையை பின்னரே வாசித்தேன். அத் நல்ல தரமுள்ள கட்டுரை. ஆனாலும், எல்லா விடயங்களையும் ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து அப்பிடியே மொழிபெயர்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழில் நிச்சியம் வேறு பலர் இப் பொருளில் எழுதியிருப்பர், ஆயினும் அப்படிப்பட்ட கட்டுரைகள் என்னிடம் இல்லை. எனவே இக் கட்டுரை என் புரிதலின் வரையறைகளுக்கு உட்பட்டு நிற்கின்றது. இக் கட்டுரையை அடிப்படையாக வைத்து மேன்படுத்தலாமா, அல்லது வேறு ஒரு அடிப்படை கட்டுரை இடலாமா என்று நீங்களும் மற்றவர்களும் சொல்லலாம், ஆனால் இப் பொருள் தமிழ் விக்கிபீடியாவில் விளக்கப்படவேண்டிய ஒன்று என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. --Natkeeran 20:58, 4 செப்டெம்பர் 2005 (UTC)Reply

இதே பொருளுடைய இணைக்கட்டுரை ஆங்கில விக்கிபீடியாவில் இருப்பதை அறியாததால் தான் இந்த மாதிரி கட்டுரைகள் கலைக்களஞ்சியத்தில் இடம் பெறத்தக்கனவா என்று கேட்க நேர்ந்தது. பொறுத்தருள்க :) இனி இம்மாதிரி கட்டுரைகள் எழுதும்போது ஆங்கில விக்கிபீடியாவில் இணைக்கட்டுரைகள் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக இணைப்பு தரவும். ஆங்கில விக்கிபீடியா கட்டுரையை வெட்டி ஒட்டி மொழி பெயர்ப்பது சில சமயங்களில் வேலையை இலகுவாக்குகிறது. அதற்காக எல்லா சமயமும் எல்லாரும் அப்படி செய்ய வேண்டிய அவசியமுமில்லை. அது நன்றாகவும் இராது. தமிழ் நடை, சிந்தனை ஓட்டத்திற்கு ஏற்ப தனித்துவத்துடன் நாமே கட்டுரைகள் எழுத வேண்டியது அவசியம் தான். நன்றி.--ரவி (பேச்சு) 10:15, 5 செப்டெம்பர் 2005 (UTC)Reply

சொற்கள் தரப்படுத்தல் நோக்கி விபர சேகரிப்பு தொகு

அறிவியல் வழி - வெங்கட்டின் சொற்கள் தொகு

  • உற்று நோக்கல் - Observation
  • கற்பிதம் - Hypothesis
  • அனுமானித்தல் - Prediction
  • சோதித்தல் - Experimentation
  • திறமான கோட்பாடு - Theory
  • அறிவியல் விதி - Law

அறிவியல் அணுகுமுறை - தனிநாயகம் அடிகளாரின் சொற்கள் தொகு

  • கூர்ந்து நோக்கல் - Observation
  • கருதுகோள் - Hypothesis
  • சோதனை - Test or Exam
  • முடிவு - Result or Findings

அறிவியல் அறிவு மார்க்கம் - கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் தொகு

  • அவதானிப்பு - Observation
  • பரிந்துரை நடைமுறை கோட்பாடு - Hypothesis
  • வருவதுரை - Predict
  • பரிசோதனை - Experimentation (Repetition)
  • நடைமுறை கோட்பாடு - Theory
  • பகிர்வு - Communication

தொடர்புடைய பிறசொற்கள் தொகு

  • முன்னூகம் - Hypothesis
  • பிரச்சினை - Problem
  • ஆய்வு - Research
  • வரையறுத்த நெறிமுறை - Systematic Analysis
  • கருத்துரை - Commenting
  • பாகுபடுத்தல் - Analysing
  • மதிப்பிடல் - Valuating
  • கொள்கை உருவாக்கல் - Theorising
  • துல்லியம் - Precision
  • Accuracy
  • விடய நோக்கம் - Objective
  • எண்ணுதி - Quantitative
  • Qualitative
  • எண்ணக்கரு - Concept
  • அபூபதி - Abstract, Abstraction
  • Level of Abstraction
  • Meta Analysis
  • கருத்தியல் - Ideal

இவற்றையும் பார்க்கவும் தொகு

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:48, 14 மே 2007 (UTC)Reply

Return to "அறிவியல் அறிவு வழி" page.