பேச்சு:அற்பாக்கா
சிவக்குமார் தொடங்கியதற்கு நன்றி. நான் தொடங்க நினைத்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது!! நான் பெருவில் இருந்து வந்தபின் எழுத நினைத்தேன்.--செல்வா 18:54, 19 ஏப்ரல் 2009 (UTC)
- ல்ப் என்று தமிழில் வருமா? அல்பாக்கா என்பதை albaca என ஒலிப்பதா alpaca என ஒலிப்பதா? கல்பாக்கம் போன்ற ஊர்ப்பெயர்களில் ல்ப் இல்லை--ரவி 06:48, 20 ஏப்ரல் 2009 (UTC)
- அல்பாக்கா என்பதை albaakkaa என்று ஒலிக்கவேண்டும். கல்பாக்கம் என்பதை Kalbaakkam என்று ஒலிக்க வேண்டும். Kalpaakkam என்று ஒலிக்க வேண்டின், பகரத்திற்கு முன் பகர ஒற்று வருதல் வேண்டும். தமிழில் வரக்கூடிய ஒலியெழுத்துகளின் கூட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன (இப்படியான வரையறைகள் மிகப்பல மொழிகளில் இல்லை). ஆனால் பிற மொழிகளில் வரும் ஒலியெழுத்துக்கூட்டங்களை ஓரளவிற்காவது ஒலித்துல்லியத்துடன் காட்டவேண்டுமெ எனில், வேறுசில தமிழ்விதிகள் மீறப்படும். தமிழின் வல்லின எழுத்துகளின் (வலிந்து, மெலிந்து ஒலிக்கும்) நுட்பமான ஒலிப்பொழுக்கம் கெடாமல் இருக்கவேண்டும் எனில் (இது தமிழ் மொழியின் அடிப்படைகளில் ஒன்று) பிற தமிழ் விதிகளை மீற வேண்டியுள்ளது. தமிழ் விதிகளை மீறாமல் எழுதமுடியும், ஆனால் ஒலிப்புகள் சற்று மாறும். அலுப்பு என்னும் தமிழ்ச்சொல் இருப்பதால் அலுப்பாக்கா என்று எழுதலாம். அல்பாக்கா என்று எழுதி albaakkaa என்று ஒலிப்பதால் ஒரு சிக்கலும் இல்லை. ஆனால் மக்கள் அல்பாக்கா என்று எழுதிவிட்டு alpaakkaa என்று ஒலித்தால், தமிழின் நுட்ப ஒலிப்பொழுக்க விதிகள் சீரழியும் (ஆங்கிலம் போல் இடத்துக்கு இடம் சீரின்றி ஒலிப்புகள் மாறும் வாய்ப்பு பெருகும்). இதேபோல கல்கி என்று எழுதினால் kalgi என்றுதான் ஒலிக்க வேண்டும், ஆனால் kalki என்று ஒலிக்க வேண்டின் கல்க்கி என்று எழுதவேண்டும். தமிழ்ல் நல்கினான், பல்கிப் பெருகும், சொல்கிறான், வெல்கிறாள் என்றெல்லாம் வரும் இடங்களில் வரும் -ல்கி- என்னும் சொல்லொலிப்பு சிதையும். தமிழர்கள் கல்கி என்று எழுதினால் kalgi என்றே ஒலிக்க வேண்டும். இப்படியாக சிறுக சிறுக பிறமொழி சொற்களைத் தமிழில் புகுத்தி, வேற்றொலியுடன் பலுக்கி தமிழ் ஒலிப்பொழுக்கத்தை சிதறடிக்கிறார்கள் சிலர். சுஜாதா என்னும் பெயரை மிகப்பலர் மிகச்சரியாக Sujadhaa என்று ஒலிக்கக்கேட்டிருக்கின்றேன், ஆனால் சிலர் சுஜா(த்)தா என்பது போல கடைசி தா வை வலிந்த்து ஒலிக்கின்றனர். இது தமிழ் முறைப்படி தவறு. பெரிதா, சிறிதா, அரிதா, மனிதா, புனிதா போன்ற பல சொற்களில் தா என்னும் எழுத்தின் முன் தகர ஒற்றொ பிற வல்லின ஒற்றோ வாராதபொழுது அச்சொற்களில் தா என்னும் எழுத்தை மெலிந்துதான் ஒலிக்க வேண்டும் (dhaa). கிரந்த எழுத்துகளால் வரும் கேடுகளில் இதுவும் ஒன்று. ஸ்தலம் என்பதை Sthala என்பதா Sdhala என்பதா? தமிழில் ஸ் என்னும் கிரந்தத்தை நீக்கி தலம் என்று எழுதுவது நெடுங்கால வழக்கு. ஸ்தாபனம் என்னும் சொல் இலங்கை கூட்டுத்தாபனம் என்று வரும்பொழுது தாபனம் என்று வழங்குகின்றது. --செல்வா 13:33, 20 ஏப்ரல் 2009 (UTC)
- தமிழில் மெய்யொலிக் கூட்டம் தொடர்பான மரபுப்படி அலுப்பாக்கா எனப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 13:46, 20 ஏப்ரல் 2009 (UTC)
- எனக்கு ஏற்புதான் சுந்தர். --செல்வா 14:23, 20 ஏப்ரல் 2009 (UTC)அற்பாக்கா என்றும் எழுதலாம். நம்மொழியில் கூறும் பொழுது நமக்கு ஏற்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துவதால் தவறே இல்லை. விக்குன்யா பாக்கோ என்றும் கூறலாம். இத்தாலியர்கள் இப்படித்தான் அழைக்கின்றனர். இவ் விலங்கின் பேரினத்தின் பெயர் விக்குன்யா (Vicugna), இவ்விலங்கின் அறிவியற்பெயர் V. pacos (விக்குனியா பாக்கோசு). மிக மென்மையான விலையுயர்ந்த தோல்மயிர் (தோல்முடி) கொண்ட விக்குன்யா என்னும் வேறொரு விலங்கும் இதே பேரினத்தைச் சேர்ந்ததே. எனவே உயிரினத் தொடர்பும் சுட்டும். குவானக்கோ என்னும் இன்னுமொரு விலங்கும் இந்த விக்குன்யா பேரினத்தைச் சேர்ந்த விலங்குதான். இவ்விலங்குகளை நான் பெரு நாடு சென்றிருந்தபொழுது நேரில் இயற்கைச் சூழலில் காணும் நல்வாய்ப்பும் பெற்றேன். எனவே விக்குன்யா பாக்கோ என்னும் சொல்லையும் கருத்தில் கொள்ளலாம். இத்தாலிய மொழியில் இதனை விக்குனியா பாக்கோசு என்றே அழைக்கின்றனர் (அல்ப்பாக்கா என்றும் கூறுகின்றனர்). --செல்வா 14:23, 20 ஏப்ரல் 2009 (UTC)
- அற்பாக்கா அல்லது விக்குன்யா பாக்கோ இரண்டுமே எனக்கு ஏற்புடையவை தாம். இவ்விலங்கை இயற்கைச் சூழலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. -- சுந்தர் \பேச்சு 14:34, 20 ஏப்ரல் 2009 (UTC)
- புகழ்பெற்ற மாச்சுப்பிச்சு என்னும் மலைமீதுள்ள அழிவுற்ற நகரத்தைக் காண இன்க்கா மலைப்பாதை (4 நாட்கள் நடை) வழியே நாங்கள் 2007 இல் சென்று கண்டபொழுது இயற்கைச் சூழலில் விக்குன்யா (விக்குன்யா விக்குன்யா) என்னும் விலங்கைக் கண்டோம். குவானக்கோவையும் கண்டோம், ஆனால் விக்குன்யா பாக்கோ (அற்பாக்கா)வைப் பெரும்பாலும் வளர்ப்பு விலங்காகத்தான் பார்த்தோம், ஆனால் இயல்பான சூழலில் கண்டோம் (உயிரினக் காட்சியகத்தில் அல்ல). விக்குன்யா விலங்குகள் மிகவும் கூச்சம் உடையவை. இவற்றின் படங்களும் என்னிடம் உள்ளன. இன்னும் இங்கு பதிவேற்றவில்லை. --செல்வா 14:48, 20 ஏப்ரல் 2009 (UTC)
- அற்பாக்கா அல்லது விக்குன்யா பாக்கோ இரண்டுமே எனக்கு ஏற்புடையவை தாம். இவ்விலங்கை இயற்கைச் சூழலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. -- சுந்தர் \பேச்சு 14:34, 20 ஏப்ரல் 2009 (UTC)
- எனக்கு ஏற்புதான் சுந்தர். --செல்வா 14:23, 20 ஏப்ரல் 2009 (UTC)அற்பாக்கா என்றும் எழுதலாம். நம்மொழியில் கூறும் பொழுது நமக்கு ஏற்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துவதால் தவறே இல்லை. விக்குன்யா பாக்கோ என்றும் கூறலாம். இத்தாலியர்கள் இப்படித்தான் அழைக்கின்றனர். இவ் விலங்கின் பேரினத்தின் பெயர் விக்குன்யா (Vicugna), இவ்விலங்கின் அறிவியற்பெயர் V. pacos (விக்குனியா பாக்கோசு). மிக மென்மையான விலையுயர்ந்த தோல்மயிர் (தோல்முடி) கொண்ட விக்குன்யா என்னும் வேறொரு விலங்கும் இதே பேரினத்தைச் சேர்ந்ததே. எனவே உயிரினத் தொடர்பும் சுட்டும். குவானக்கோ என்னும் இன்னுமொரு விலங்கும் இந்த விக்குன்யா பேரினத்தைச் சேர்ந்த விலங்குதான். இவ்விலங்குகளை நான் பெரு நாடு சென்றிருந்தபொழுது நேரில் இயற்கைச் சூழலில் காணும் நல்வாய்ப்பும் பெற்றேன். எனவே விக்குன்யா பாக்கோ என்னும் சொல்லையும் கருத்தில் கொள்ளலாம். இத்தாலிய மொழியில் இதனை விக்குனியா பாக்கோசு என்றே அழைக்கின்றனர் (அல்ப்பாக்கா என்றும் கூறுகின்றனர்). --செல்வா 14:23, 20 ஏப்ரல் 2009 (UTC)
- தமிழில் மெய்யொலிக் கூட்டம் தொடர்பான மரபுப்படி அலுப்பாக்கா எனப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 13:46, 20 ஏப்ரல் 2009 (UTC)
- அல்பாக்கா என்பதை albaakkaa என்று ஒலிக்கவேண்டும். கல்பாக்கம் என்பதை Kalbaakkam என்று ஒலிக்க வேண்டும். Kalpaakkam என்று ஒலிக்க வேண்டின், பகரத்திற்கு முன் பகர ஒற்று வருதல் வேண்டும். தமிழில் வரக்கூடிய ஒலியெழுத்துகளின் கூட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன (இப்படியான வரையறைகள் மிகப்பல மொழிகளில் இல்லை). ஆனால் பிற மொழிகளில் வரும் ஒலியெழுத்துக்கூட்டங்களை ஓரளவிற்காவது ஒலித்துல்லியத்துடன் காட்டவேண்டுமெ எனில், வேறுசில தமிழ்விதிகள் மீறப்படும். தமிழின் வல்லின எழுத்துகளின் (வலிந்து, மெலிந்து ஒலிக்கும்) நுட்பமான ஒலிப்பொழுக்கம் கெடாமல் இருக்கவேண்டும் எனில் (இது தமிழ் மொழியின் அடிப்படைகளில் ஒன்று) பிற தமிழ் விதிகளை மீற வேண்டியுள்ளது. தமிழ் விதிகளை மீறாமல் எழுதமுடியும், ஆனால் ஒலிப்புகள் சற்று மாறும். அலுப்பு என்னும் தமிழ்ச்சொல் இருப்பதால் அலுப்பாக்கா என்று எழுதலாம். அல்பாக்கா என்று எழுதி albaakkaa என்று ஒலிப்பதால் ஒரு சிக்கலும் இல்லை. ஆனால் மக்கள் அல்பாக்கா என்று எழுதிவிட்டு alpaakkaa என்று ஒலித்தால், தமிழின் நுட்ப ஒலிப்பொழுக்க விதிகள் சீரழியும் (ஆங்கிலம் போல் இடத்துக்கு இடம் சீரின்றி ஒலிப்புகள் மாறும் வாய்ப்பு பெருகும்). இதேபோல கல்கி என்று எழுதினால் kalgi என்றுதான் ஒலிக்க வேண்டும், ஆனால் kalki என்று ஒலிக்க வேண்டின் கல்க்கி என்று எழுதவேண்டும். தமிழ்ல் நல்கினான், பல்கிப் பெருகும், சொல்கிறான், வெல்கிறாள் என்றெல்லாம் வரும் இடங்களில் வரும் -ல்கி- என்னும் சொல்லொலிப்பு சிதையும். தமிழர்கள் கல்கி என்று எழுதினால் kalgi என்றே ஒலிக்க வேண்டும். இப்படியாக சிறுக சிறுக பிறமொழி சொற்களைத் தமிழில் புகுத்தி, வேற்றொலியுடன் பலுக்கி தமிழ் ஒலிப்பொழுக்கத்தை சிதறடிக்கிறார்கள் சிலர். சுஜாதா என்னும் பெயரை மிகப்பலர் மிகச்சரியாக Sujadhaa என்று ஒலிக்கக்கேட்டிருக்கின்றேன், ஆனால் சிலர் சுஜா(த்)தா என்பது போல கடைசி தா வை வலிந்த்து ஒலிக்கின்றனர். இது தமிழ் முறைப்படி தவறு. பெரிதா, சிறிதா, அரிதா, மனிதா, புனிதா போன்ற பல சொற்களில் தா என்னும் எழுத்தின் முன் தகர ஒற்றொ பிற வல்லின ஒற்றோ வாராதபொழுது அச்சொற்களில் தா என்னும் எழுத்தை மெலிந்துதான் ஒலிக்க வேண்டும் (dhaa). கிரந்த எழுத்துகளால் வரும் கேடுகளில் இதுவும் ஒன்று. ஸ்தலம் என்பதை Sthala என்பதா Sdhala என்பதா? தமிழில் ஸ் என்னும் கிரந்தத்தை நீக்கி தலம் என்று எழுதுவது நெடுங்கால வழக்கு. ஸ்தாபனம் என்னும் சொல் இலங்கை கூட்டுத்தாபனம் என்று வரும்பொழுது தாபனம் என்று வழங்குகின்றது. --செல்வா 13:33, 20 ஏப்ரல் 2009 (UTC)
Start a discussion about அற்பாக்கா
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அற்பாக்கா.