பேச்சு:அல்பட்ரோசு

Add topic
Active discussions

Albatrossன் தமிழ்ப் பெயர்

Albatrossன் தமிழ் பெயர் இங்கே அண்டரண்டப் பறவை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு BBC News தமிழ் இணைய பக்கத்தில் வெளியான கட்டுரை மேற்கோள் காட்டப்படுள்ளது[1]. ஆனால் இணையத்தில் இந்த ஒரு கட்டுரையைத் தவிர வேறு எங்குமே அண்டரண்டப் பறவைதான் Albatross என குறிப்பிடப்படவில்லை. பறவைகள் குறித்த எந்த தமிழ் நூல்களிலும் இதற்கான குறிப்புகள் இல்லை. Albatross ஒரு கடல் பறவை, தமிழில் எல்லா பறவைகளுக்கும் பெயர்கள் இல்லை, குறிப்பாக இது போன்ற கடல் பறவைகளுக்கு (pelagic birds). சில வேளைகளில் சில வகைப் பறவைகளுக்கு முறையான ஆராய்ச்சிகள் செய்யாமல் புராணங்களில் சித்தரிக்கப்படும் பறவைகளின் பெயர்களை சிலர் வைத்துவிடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY இணைய தளத்தில் உள்ள கலைச்சொற்களில் இப்படி Albatrossக்கு அண்டரண்டப் பறவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிச் செய்வதால் குழப்பங்களே மேலிடும். இதை மூலமாக வைத்துத் தான் BBC News தமிழ் கட்டுரையிலும் இப்பறவையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கக் கூடும். இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். அதே தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMYன் மற்றொரு பக்கத்தில் அண்டரண்டப்பட்சி எனும் சொல்லுக்கு விளக்கம் - பெரும்பறவை ; கழுகு [2] என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது முன்னுக்குப்பின் முரணாக இருப்பதை அறியலாம்.

அதே வேளையில் கி. ரா அவர்கள் அண்டரெண்டப் பட்சி எனும் நாவலை எழுதியுள்ளதையும் அறிவோம். இந்நூலில் இப்பெயர் கொண்ட பறவை ஒரு புராணகாலப் பறவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. மேலும், அண்டரண்டப் பட்சி எனும் பெயரில் மற்றுமொரு நூலும் உள்ளது [4]. அந்த நூலின் விமர்சனத்தில் "அண்டரண்டப்பட்சி, முன்னொரு காலத்தில் வாழ்ந்த மூத்த பறவை. எட்டு யானைகளை அடக்கி, தூக்கி கொண்டு பறக்கக் கூடிய வலிமையும், சாமர்த்தியமும் மிக்கதாக, புராணங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன." என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுராவின் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதியில் அண்டரண்டப் பறவைக்கு கழுகு:eagle என்று தரப்பட்டுள்ளது [5]. கடைசியாக அண்டரண்டப்பட்சிக்கான விளக்கம் தமிழ் விக்சனரியில் பெரும்பறவை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது [6].

குழப்பமான இந்த சூழலில் இந்த விக்கிபீடியா கட்டுரையில் Albatrossன் தமிழ் பெயராக அண்டரண்டப் பறவை எனக் குறிப்பிடுவது சரியாக இருக்காது. ஆகவே, அதை நீக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

PJeganathan (பேச்சு) 18:01, 6 திசம்பர் 2021 (UTC)

Referencesதொகு

  1. பருவநிலை மாற்றம்: பறவைகளிடம் மணமுறிவு? அண்டரண்டப் பறவைகளின் காதல் உலகத்தில் புதிய சிக்கல், BBC News தமிழ்
  2. அண்டரண்டப்பட்சி, Tamil Virtual Academy
  3. வாசகர்களிடம் கைப்பிரதியாகச் சுற்றிவரும் கி.ரா.வின் புதிய நாவல்: பேராசிரியர் ஞானபாரதி பதிவு
  4. அண்டரண்டப் பட்சி (ஆசிரியர் : சந்திரகாந்தன், வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)
  5. சுராவின் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி
  6. அண்டரண்டப்பட்சி - தமிழ் விக்சனரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அல்பட்ரோசு&oldid=3329280" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அல்பட்ரோசு" page.