பேச்சு:அஸ்லெப்பியசின் தடி

மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் அஸ்லெப்பியசின் தடி எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இக்கட்டுரையில் Symbol என்பதற்கு குறியீடு என்ற வார்த்தையைப் புழங்கியுள்ளேன். வேறு பொருத்தமான சொல் இருப்பின் பரிந்துரைக்கவும். --Sivakumar \பேச்சு 18:21, 2 பெப்ரவரி 2007 (UTC)

சிவகுமார், சின்னம் ( = emblem) என்னும் சொல் பொருந்தும் என நினைக்கிறேன். மேலும் அஸ்லெப்பியசின்

என்றும் இருத்தல் நலம். இல்லாவிடில் Asclebius என படிக்க நேரிடும். மேலும் சுகாதாரம் என்பது பொதுவாக hygiene என்னும் சொல்லுக்கு ஆளப்படுகின்றது. உடல்நலம் அல்லது உளவுடல் நலம் எனத் தெளிவாக அனைவரும் படித்தவுடன் பொருள் உணருமாறு அமைதல் நலம். --செல்வா 20:52, 2 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி செல்வா. சின்னம் என்று மாற்றி விடுகிறேன். பொதுவாக ஊடகங்களில் WHO உலக சுகாதார நிறுவனம் என்றே குறிக்கப்படுகிறது. --Sivakumar \பேச்சு 09:54, 3 பெப்ரவரி 2007 (UTC)

ஆமா, ஊடங்களில் உலக சுகாதார நிறுவனம் என்று தான் இருக்கிறது. குறைந்தது வழிமாற்றாவது விக்கிபீடியாவில் இருக்க வேண்டும். இன்னொன்று , wikipediaவின் பெயரே தமிழில் விக்கிப்பீடியா என்று தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், விக்கிபீடியா என்பது தொடக்கத்தில் யாரோ எழுதப்போய் அதுவே நிலைத்து விட்டது.!!!--Ravidreams 10:10, 3 பெப்ரவரி 2007 (UTC)

Start a discussion about அஸ்லெப்பியசின் தடி

Start a discussion
Return to "அஸ்லெப்பியசின் தடி" page.