பேச்சு:அ. அமிர்தலிங்கம்
Untitled
தொகுஇந்த கட்டுரையையும் , தமிழீழம் தொடர்பான ஏனைய சில கட்டுரைகளையும் நான் வாசிக்கும் போது எழும் சில கருத்துக்களை முன் வைக்கிறேன்.
- நடுவு நிலை: சில சம்வங்கள் சில அரசியல் கொலைகள் என்பன யாரால் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தெரிந்திருந்தும். பல தளங்களிலும் அதற்கான ஆதாரங்கள் இருந்தும் கட்டுரையில் அதனை தெரிவிக்காது விடுவது நடுவு நிலை மீறலாகாதா? ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றை எதிர்ப்பார்க்கிறேன்.
- ஆதாரங்கள்: ஒரு முக்கிய கருத்தை முன்வைக்கும் போது நம்பகமான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்ற த.விக்கியின் விதியை அரசியல் சார்பான கட்டுரைகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
- சொந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஆங்கில விக்கியில் செய்வது போல வார்ப்புருவை இட்டு காட்ட வேண்டும்.
இவை த.விக்கியின் நடுவுநிலையை காக்கும். உதாரணமாக
"எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின"....
"தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.
இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. இறுதியில் அமிர்தலிங்கம், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகவேண்டி ஏற்பட்டது."
- இங்கு உள்ள கூற்றுகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை. சரியான ஆதாரங்கள் இந்த கூற்றுகளுக்கு தரப்படாவிட்டால் இந்த கட்டுரையின் தொனி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலையை நியாயப்படுத்த முனைவதாக தோன்றலாம்.