பேச்சு:ஆசியக் குயில்
"அடையுருவி" சரியான சொல்லா? தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் brood parasitismத்திற்கு ([காண்கhttp://ta.wiktionary.org/wiki/brood_parasitism)]அடைகாக்கும் ஒட்டுண்ணி என்று கூறுகிறது.--கார்த்திக் 17:54, 28 மே 2009 (UTC)
அடையுருவி
தொகுஇந்தச்சொல் நானே உருவாக்கியது தான். கண்டிப்பாக இச்சொல் பரிசீலனைக்கு உட்பட்டாக வேண்டும். உருவாக்குமுன் விக்சனரியும் கண்டேன்; விக்சனரியில் கூறப்பட்டுள்ள அடைகாக்கும் சரியாகப்படவில்லை -- ஏனெனில் குயில் அடை காப்பதில்லையே! மேலும் ஒட்டுண்ணி என்பது parasite- ஐக் குறிக்குமேயன்றி parasitism- ஐக் குறிக்காது. வின்சுலோவிலும் தமிழ்ப்பேரகரமுதலி யிலும் தேடியதில் parasite- க்கு உருவி என்ற சொல் ஒட்டுண்ணி என்ற பொருளைத் தருவது தெரிந்தது. ([காண்க http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=parasite&table=winslow)] Brood என்ற சொல்லுக்கு அடை என்ற பொருள் வப்ரீயசு வில் தரப்பட்டுள்ளது. --பயனர்:பரிதிமதி
- நாயுருவி என்ற சொல்லும் கூட வழக்கத்தில் உள்ளது. இது ஒரு வகை விலங்குகளின் உடலில் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடைய கொக்கி போன்ற முட்களைக் கொண்ட காயின் பெயர் (பார்க்க படம்1 படம்2). இதனையும் ஒப்பு நோக்கலாம்.--சிவக்குமார் \பேச்சு 19:21, 28 மே 2009 (UTC)
- புல்லுருவி என்னும் சொல் பொதுவாக parasite என்பதற்கு வழங்கும் பெயர். ஏழைகளின் உழைப்பை உறிஞ்சி வாழ்பவன் என்னும் வகையில் குமுகச் சூழலிலும் பரவலாகப் பயன்படும் சொல். இது உருவு என்னும் சொல்லில் இருந்து பெற்றது. உருவுதல் என்றால் வெளியே எடுத்தல், களைதல், நீக்குதல் என்னும் பொருளுடையது. வாளை, வாளுறையில் இருந்து எடுத்தலுக்கும், வாளை உருவினான் என்று சொல்லலாம். வேறு ஓர் இனத்தின் ஊட்டச்சத்தை உறிஞ்சி வாழும் பிறிதோர் இனத்துக்கு உருவி என்று சொல்வர். புல்லுருவி, நாயுருவி முதலிய சொற்கள் இப்படி ஏற்பட்டதே. உணி, உண்ணி என்னும் சொற்களும் இத்தகைய பொருளில் ஆளும் சொற்கள். இங்கே கரவாக பிறிதோர் இனப்பறவையின் அடையில் தன் முட்டையை இடுவதால், அடைகாக்கும் உழைப்பை உருவி வாழ்கின்றது எனலாம். அடையுருவி என்பது அடைகாக்கும் உழைப்பை உருவி (கரவாக உறிஞ்சி) வாழ்வதாகக் கொள்ள இடம் உண்டு. குயில் அடைசொருகி :) --செல்வா 19:26, 28 மே 2009 (UTC)