பேச்சு:ஆசிரியர்களுக்கான தேசிய விருது

//ஒருவர் இவ்விருது பெற இருபது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், சமுதாயத்தில் கண்ணியமானவராகவும், புகழ்மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர்களிடத்தில் அன்பு மிக்கவராகவும், சமுதாய நலனில் பங்கு கொள்பவராகவும் இருத்தல் வேண்டும்//

இத்தகுதிகளை வரையறுக்கும் முறையான சான்று ஏதும் உள்ளதா? --இரவி (பேச்சு) 06:32, 28 மார்ச் 2012 (UTC)

இதே கருத்தை அமுதம் தகவல் களஞ்சியமும் கொண்டுள்ளது. இதன் நம்பகத்தன்மை குறித்து, ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. -- பயனர்:Dineshkumar Ponnusamy

அமுதம் தளத்தில் இருந்து வரி மாறாமல் அப்படியே இட்டிருப்பதால் பதிப்புரிமை மீறலாக இருக்கலாம் (ஒரு வேளை அத்தளமும் கிரியேட்டிவ் காமன்சில் இருந்தாலோ விக்கிப்பீடியரே அதை எழுதியிருந்தாலோ பதிப்புரிமை மீறல் ஆகாதிருக்க வாய்ப்புண்டு). பெரும்பாலும் தகவலைக் கொண்ட சிறிய கட்டுரை என்பதால் பதிப்புரிமைப் பிரச்சினையைப் பிறகு கவனிக்கலாம். விருது பெறுவதற்கான தகுதி நம்பகமானதே. இது அரசு விருது என்பதால் அரசு தளத்தில் இருந்து ஏதேனும் முறையான அறிவிப்பைத் தந்தால் தக்க சான்றாக இருக்கும்.--இரவி (பேச்சு) 11:24, 28 மார்ச் 2012 (UTC)

இந்த இணைப்பு மத்திய அரசு இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கான தேசிய விருது-- பயனர்:Dineshkumar Ponnusamy

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"

தொகு

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)

Return to "ஆசிரியர்களுக்கான தேசிய விருது" page.