பேச்சு:ஆன்றி முவாசான்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

பிரெஞ்சு henri ஆன்றி என்றல்லவா ஒலிக்கப்படும்--சோடாபாட்டில்உரையாடுக 12:38, 22 சனவரி 2012 (UTC)Reply

பிரான்சிய மொழியில் முதலில் வரும் en என்னும் எழுத்தின் ஒலிப்பு ""ஆ", "எ" ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஒலிப்பு. ஆங்கிலத்தில் ensemble, envelope போன்ற சொற்களில் வருவது போல வரும். நீங்கள் சொல்வது போல அகர நெடில் ஒலி அதிகமாகத் தெரியும். ஆனால் Henri என்பதில் முடியும் -ri என்னும் ஒலிப்பு அவர்களுக்கே உரித்தான அடித்தொண்டை "ற"கரம். ஆன்றி என்று கட்டாயம் மாற்றலாம். தமிழில் பஃறுளி ஆறு என்று ஒன்று இருந்தது அதில் வரும் ஃறு பிரான்சிய R அன்று (இல்லை) என்றாலும், நாம் ஃ + று என்பது தொண்டை ஒலியை கொஞ்சமாவது சேர்த்துக் காட்டும்.(பிராசிய ஒலிப்பில் வரும் "றகர" ஒலி முற்றிலும் வேறானது). Paris என்பதை நாம் பாஃறீ என்று சொன்னால் துல்லியமாக இல்லாவிட்டாலும் ஒருசிறிது பிரான்சிய ஒலி நோக்கி நகர்வதாகக் கொள்ளலாம். இதனை நாம் தமிழில் பாரிசு என்று எழுதுகிறோம் (பாரீ என்றோ, பாறீ என்றோ பாஃறீ என்றோ எழுதுவதில்லை) --செல்வா 13:02, 22 சனவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆன்றி_முவாசான்&oldid=986294" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆன்றி முவாசான்" page.