பேச்சு:ஆபிரிக்க அமெரிக்கர்

கோபி - ஆப்பிரிக்க அமேரிக்கர் என்பதே சரியான பிரயோகம். மோகன்தாஸ் 10:53, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆபிரிக்க அமெரிக்கர் என்பது ஈழ வழக்கு. தமிழகத்தவர் ஆப்பிரிக்க என்று பயன்படுத்துவது அறிந்ததுதான். ஆனால் அமேரிக்கர் என்று த.வி.யில் பயன்பாடு இல்லையே... --கோபி 11:01, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இல்லை நான் ஆப்பிரிக்கவை மட்டும் சொல்லவந்தேன். அமேரிக்கா என்பது சாதாரணமா எழுதும் பொழுது எழுதப்படுவது ;) மோகன்தாஸ் 11:30, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

எனக்குத் தெரிந்து தமிழ் இலக்கணப்படியும் ஆபிரிக்க என்பது தவறானதாகும். இலக்கணப்படி ஆப்பிரிக்க என்றே வரணும் என்று நினைக்கிறேன் - யாராவது உதவலாம்.

தமிழ்நாட்டில் இருந்து நாளை ஒருவர் ஆப்பிரிக்காவை தேடிவரும் பொழுது அவர் ஆபிரிக்கா என்று தேடுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவே மோகன்தாஸ் 12:59, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

மோகன்தாஸ் இது நாம் ஏற்கனவே பல இடங்களில் உரையாடிய விடயம்தான். தமிழில் இலங்கை வழக்கு இந்திய வழக்கு என இரண்டு உள்ளது இரண்டில் எது சரி பிழை என்பதைவிட அது வழக்கு ஆதாலால் அப்படியே ஏறுகொள்வதுதான் தமிழுக்கும் தவி க்கும் ஏற்றது. கோபி இலங்கை அல்லது ஈழ வழக்கில் ஆபிரிக்க அமெரிக்கர் என கட்டுரையை தொடங்கியுள்ளார் அது அவர் பின்பற்றிய ஈழ வழக்கின் காரணாமக அவ்வாறு செய்துள்ளார். இந்திய பயனர்களின் தேவைக்காக ஆப்பிரிக்க அமெரிக்கர் என்ற வழிமாற்றை இக்கட்டுரைக்கு ஏற்படுத்தலாம். அதேபோல் இந்திய வழக்கில் தொடங்கும் கட்டுரைகளுக்கு ஈழவழக்கிற்க்கான வழிமாற்று வழங்கப்படவேண்டும் இதுவே தவி வழமையாக உள்ளது. இந்தப் பக்கத்தில் தொடர்புடைய உரையாடல்களைக் காணலாம்.--டெரன்ஸ் \பேச்சு 13:20, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

தெரன்சு, நீங்கள் சுட்டியுள்ள புரிந்துணர்வு குறித்து அறிவேன். ஆனால், இலங்கை வழக்கானாலும் தமிழக வழக்கானாலும் மிக இலகுவாகத் தவறான வழக்கு என்று நிறுவக் கூடிய இடங்களில் சரியானதை முன்னிலைப்படுத்தலாமே? ஆபிரிக்கா என்பதை aabirikka என்றே பலுக்க இயலும். இதைக் காட்டிலும் ஆப்பிரிக்கா தரும் aappirikka ஒலிப்பு மூலப் பெயருக்கு நெருக்கமாகத் தோன்றுகிறதே?

தொடங்கியவர் எழுதும் வழக்கை முதன்மைப்படுத்துவது என்பதும் தொலைநோக்கில் சிக்கலான ஒன்று. ஒருவர் ஓரிரு வரிகளில் பல கட்டுரைகளைத் துவங்கலாம். ஆனால், பிறகு அதற்கு மாறான வழக்கில் அக்கட்டுரை முழுக்க பெருமளவு விரிவாக்கப்பட்டாலும் முதலில் எழுதிய வழக்கையே பின்பற்றுவது நடைமுறைக்கு ஒத்து வராது. இது, இலங்கை x தமிழகப் பிரச்சினை மட்டுமில்லை. நாடு சாரா தலைப்புப் பிரச்சினைகள் பலவுண்டு. கிரந்தம், பிற மொழி தவிர்த்து எழுதக்கூடிய இடங்களிலும் சிலர் இப்படி முந்தி எழுதி வாதிடலாம். எனவே, இது போன்ற விசயங்களில் முதலில் எழுதப்பட்ட வழக்கு என்பதை இறுகப்பற்றாமல் ஒவ்வொரு கட்டுரைக்கும் கொஞ்சமாவது தனித்தனியாக உரையாடிப் பார்த்து முடிவெடுக்க முனையலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் பெருமளவு ஈழத்தவர் பங்களிப்பு இருக்கும்போது உழைப்பேதும் நல்காமல் "எங்கள் வழக்கில் எழுதுங்கள்" என்று சொல்ல தமிழகத் தமிழருக்கு உரிமை இல்லை. ஆனால், நாளை ஓரளவு தமிழகத் தமிழர் பெரும்பான்மை எண்ணிக்கையில் பங்களிக்கத் தொடங்கினால், அதுவே ஈழ வழக்குப் புறக்கணிப்புக்கு வித்திட்டு விடக்கூடாது. பெரும்பான்மை, முதல் வழக்கு போன்றவை தொலைநோக்கில் சிக்கல் தரும் என்று தோன்றுகிறது. இது குறித்து கொள்கை வகுப்பதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் உரையாடுவதும் பெரும் சிக்கலானதும் நேரம் எடுப்பதும் ஆகும். எனினும், இது குறித்து தமிழ் விக்கிப்பீடியர் சிந்திப்பது நல்லது--ரவி 15:08, 4 மே 2008 (UTC)Reply

இது தொடர்ச்சியாக இருந்து வரும் ஒரு பிரச்சினை. இதை விட்டுத்தான் பிடிக்கவேண்டும் என்பது எனது கருத்து. ஈழத்துத் தமிழ் வழக்கு என்பதை ஒரு சாதாரண வட்டார வழக்கு என்பதற்குள் அடக்கிவிட முடியாது. தமிழில் உள்ள ஏனைய வட்டார வழக்குகளைப் போலன்றி ஈழத்து வழக்குக்கு நீண்டகால இலக்கிய மரபு உண்டு, அறிவியல் மொழி வழக்கு உண்டு. எனவே இது சமூகத்தில் பல அம்சங்களையும் தழுவி ஆழமாக வேரூன்றியுள்ளது. "நீங்கள் பயன்படுத்தும் சொற்கள் சரியல்ல அதனால் மாற்றுங்கள் என்று சொல்லமுடியாது". இன்னொரு முக்கியமான விடயத்தையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். ஈழத்துத் தமிழ் வழக்குப் பிற மொழிச் சொற்களைத் தாராளமாகக் கடன் வாங்கியதால் உருவானதல்ல. தமிழகத்தவரால் புரிந்து கொள்ளமுடியாத ஈழத்தவரின் சொற்கள் பலவும்கூடத் தமிழ் வேர்களைக் கொண்டவையே. பிற மொழிச் சொற்களை உச்சரிக்கும் முறையிலும், அதைத் தமிழில் எழுதும் முறையிலும் தனித்துவமான சில பண்புகள் ஈழத்தமிழருக்கு உண்டு. இதில் சரி பிழை என்று பார்க்கமுடியாது. தமிழ் மொழிக்குக் கேடானவை என்று தெளிவாகத் தெரிவனவற்றைச் சரிசெய்ய வேண்டியதுதான். அப்படியல்லாதவற்றை அது யாருடையதாக இருந்தாலும் தமிழ் அவற்றை உள்வாங்கிக் கொள்வதிலும் தவறில்லை.

தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை எழுதப்படும் எல்லாவற்றையும் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும். ஈழத்தமிழரால் எழுதப்பட்ட கட்டுரை தமிழ் நாட்டவராலும், தமிழ் நாட்டவரால் எழுதப்பட்டது ஈழத்தமிழராலும் புரிந்து கொள்ளப்படாத வழக்கில் இருப்பது முறையல்ல. இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பல வழிமுறைகள் ஏற்கெனவே விக்கிப்பீடியாவில் உண்டு. வேண்டுமானால் நாங்களும் சில வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஆபிரிக்கா, ஆப்பிரிக்கா விடயத்தில் இலக்கணம் எதுவும் வராது. தமிழகத்திலும் Gopal என்பதை கோபால் என்றுதான் நீண்டகாலமாகவே எழுதுகிறார்கள். ஆங்கில ஒலிப்புக்கோ அல்லது சமஸ்கிருத ஒலிப்புக்கோ அருகில் வரவேண்டும் என்பதற்காகச் சிலர் கோப்பால் என்று உச்சரிப்பதைக் காணலாம். ஆனால் அது தமிழ் வழக்கு என்று ஒத்துக்கொள்வதில்லை அல்லவா. மயூரநாதன் 16:44, 4 மே 2008 (UTC)Reply

மயூரனாதன், உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்கிறேன். எனினும் case by case பார்க்க வேண்டிய இடங்களும் உள்ளனவே? சரி, தவறு என்பவற்றை ஈழ வழக்கு குறித்து மட்டும் சொல்ல வில்லை. தமிழக வழக்கிலும் அப்படி தவறு இருக்கும்போது ஈழ வழக்கை முதன்மைப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஈழத்தில் உச்சரிக்கும்போது aabirikkaa என்று உச்சரிக்கிறார்களா aappirikkaa என்று உச்சரிக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன்--ரவி 19:16, 4 மே 2008 (UTC)Reply

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி உச்சரிப்பார்கள். சிலர் aabirikkaa என்பார்கள். சிலர் aapirikkaa என்பார்கள். உச்சரிப்புக்கேற்ப எழுத வேண்டும் என்பது கட்டாயமில்லையே (அதுவும் குறிப்பாக வேறு மொழிச் சொற்களை). தமிழக ஊடக ஆதிக்கம் ஈழத்தில் அதிகம் இருந்தாலும் (இது ஒரு வழிப்போக்கு என்பதைக் கவனிக்க) ஆபிரிக்கா, பாகிஸ்தான் என்றே எழுதப்பழகி விட்டோம்.--Kanags \பேச்சு 12:50, 5 மே 2008 (UTC)Reply

கட்டாயம் என்றில்லை. ஆனால், இயன்ற இடங்களிலாவது உச்சரிப்பது போலே எழுதுவது தமிழ் ஒலிப்பைச் சிதைக்காமல் இருக்க உதவுமே :( africaவை aabirikkaa என்றோ aappirikkaa என்றோ உச்சரிப்பது பெரிய விசயமில்லை. ஆனால், ஆபிரிக்கா (aabirikkaa) என்று எழுதி விட்டு aappirikkaa என்று உச்சரிப்பது தமிழ் ஒலிப்பைச் சிதைப்பதாக இருக்கிறது. இதே போல் பாகிஸ்தான் (paagisthaan) என்று எழுதிவிட்டு paakisthaan என்று உச்சரிப்பதும் உறுத்தலாக இருக்கிறது. பிற மொழிச் சொல்லை எப்படியாவது எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். ஆனால், எப்படி உச்சரித்தாலும் இயன்ற அளவு அதற்கு நெருக்கமாக தமிழ் ஒலிப்பு சிதையாமல் எழுதிக் காட்டலாமே. இரு நாடுகளிலுமே பழகிப் போன பிழைகள் இருக்கின்றன. இவற்றில் பிழை என்று தோன்றுவதை இரு நாட்டவரும் தாமே மாற்றி எழுத முன்வந்தால் நன்றாக இருக்கும். --ரவி 14:47, 5 மே 2008 (UTC)Reply

//இவற்றில் பிழை என்று தோன்றுவதை இரு நாட்டவரும் தாமே மாற்றி எழுத முன்வந்தால் நன்றாக இருக்கும்.//
ரவி, எது பிழை எது சரி என்று தீர்மானிப்பதில்தான் பிரச்சினையே இருக்கிறது. ஈழத்தவர் தமது வழக்குச் சரி என்றுதான் சொல்வர். தமிழ்நாட்டவருக்கு அது பிழையாகத் தோன்றும். இதுபோலவே தமிழ் நாட்டவருக்குச் சரியானவை ஈழத்தவருக்குப் பிழை எனத் தோன்றும். சொற்களில் பல்வேறு இடங்களில் வருகின்ற க, ச, ப, த போன்ற எழுத்துக்களின் ஒலி வேறுபாடுகளை உச்சரிப்பதில் தமிழ்நாட்டவருக்கும், ஈழத்தவருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி ஏற்கெனவே விக்கிப்பீடியாப் பக்கங்களில் உரையாடியுள்ளோம். ஈழத்தில் ஆபிரிக்கா என்பதில் வரும் பி யை bi என்றோ பாகிஸ்தான் என்பதில் வரும் கி யை gi என்றோ உச்சரிக்கும் வழக்கம் இலங்கையில் இல்லை. ஆபிரிக்காவில் வரக்கூடிய பி யை, பிடி என்பதில் வரும் பி யை உசரிப்பதுபோல் சற்று அழுத்தம் குறைத்து உச்சரிப்பர். அதுபோலவே பாகிஸ்தானில் உள்ள கி, கிணறு என்பதில் வரும் கி யைப் போல் சற்று அழுத்தம் குறைத்து உச்சரிக்கப்படும். இது ஓரளவு hi ஒலிக்கு அண்மையாக வரும். ஈழத்தில் மெல்லின மெய்களுக்குப் பின்னர் வரும் கரம், கரம் என்பன மட்டுமே முறையே b, g ஒலிகளாக உச்சரிக்கப்படுகின்றன. எ.கா: தம்பி (thambi), கம்ம் (kambam), சங்ம் (sangam), தாங்கு(thaangu). ஈழத்தமிழர் பேசும்போது கேட்டால்தான் இது தெளிவாகப் புரியும். இன்னும் விளக்கங்களைப் பின்னர் எழுதுகிறேன். மயூரநாதன் 02:42, 6 மே 2008 (UTC)Reply
Return to "ஆபிரிக்க அமெரிக்கர்" page.