பேச்சு:ஆற்றல்
சக்தி உற்பத்தி செய்யக்கூடிய முறைகள்
தொகு- நீர் அருவி
- கடல் அலை
- சூரிய சக்தியில் இருந்து
- Geo Thermal
- Bio fuel
- அணு
ஆற்றல் Energy என்றால் சக்தி என்ன? Power என்ன?
தொகு--Natkeeran 00:10, 14 ஜூன் 2008 (UTC)
- ஆற்றல், சக்தி, சத்தி, energy அனைத்தும் ஒன்றுதான். இலங்கையில் சக்தி என்றே உபயோகத்தில் உள்ளது. பௌதிகவியலில் power என்பதற்கு வலு எனப் பாவித்தோம்.--Kanags \பேச்சு 03:41, 14 ஜூன் 2008 (UTC)
- ஆம். ஆற்றல், சத்தி, சக்தி, energy எல்லாமும் ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள். power என்பதற்குத் திறன் என்று தமிழ் நாட்டில் வழங்குகிறார்கள். குதிரைத்திறன் (horse-power) என்னும் பழைய அலகும் நினைவுகூரத்தக்கது. ஆனால், திறன் என்பது efficiency என்பதற்கும் பயன்படுகிறது. அ.கி. மூர்த்தியின் அகராதியில், efficiency என்பதற்குப் பயனுறுதிறன் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பொருத்தமானதுதான், என்றாலும் சிறு மாற்றம் தேவைப்படுகின்றது. பயனுறுதிறன் என்பது useful power (~ output power?) என்பதுபோன்ற ஒரு பொருள் தர வல்லது. எனவே. பயன்திறன் கெழு என்றோ பயன்திறன்மை, சுருக்கமாக திறமை என்றோ அழைக்கலாம் என்பது என் கருத்து. திறமைக்கெழு என்றும் அழைக்கலாம். ஆற்றல் பயன்படும் நேரவிரைவு திறன் (power) எனப்படும்
- ,
- W என்பது வேலை, t என்பது நேரம். E என்பது ஆற்றல். எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு ஆற்றலோ, வேலையோ நடக்கின்றது என்பது திறன். வேலை நடக்கும் விரைவு அல்லது ஆற்றல் பயன்படும் (செலவாகும்) விரைவு திறன்.
- --செல்வா 12:05, 14 ஜூன் 2008 (UTC)