பேச்சு:ஆலசன்

அலசன் எனத் தலைப்பை மாற்ற வேண்டுகிறேன்.--Kanags \பேச்சு 08:34, 19 டிசம்பர் 2008 (UTC)

தலைப்பை ஆலசன் என்று வேண்டுமானால் மாற்றலாம். ஆங்கில மொழியில் குறில், நெடில் என்பது எழுத்தில் குறிப்பிடப்படாததால், ஒலிப்பைப் பார்த்து நாம்தான் நம் மொழியில் குறிப்பிட வேண்டும். Albert என்று எழுதினாலும் அவர்கள் ஆல்பர்ட் என்று முதல் எழுத்தொலியை நீட்டியே ஒலிக்கின்றார்கள். அல்பர்ட் என்றால் குறிலாக இருக்கும். இதே போல Apple. ஆனால் accord, apply, appeal ஆகிய சொற்களில் முதல் அகரம் குறிலாக ஒலிக்கும். இவ் வேறுபாட்டைக் காடுதல் கட்டாயம் தேவை. ஆங்கிலத்தில் அகர ஒலிகளில் எகரம் சிறிதேறிய அகர உயிரொலி வேறு இன்னும் குழப்பம் தருவது (தமிழில்). Apple என்னும் சொல்லின் முதல் ஒலியாக வரும் அகரம் இப்படிப்பட்ட எகர உயிரொலி கலந்த அகரம். இது தமிழில் கிடையாது. நாம் தமிழில் அகரமாகவே எழுத இயலும், பலுக்கவும் செய்கிறோம். Apple, Ape, Appeal (or America) ஆகிய ஒவ்வொரு சொல்லிலும் வரும் அகரமும் வேறாகும். Ape என்பதை \ˈāp\ என்றும், appeal என்பதை \ə-ˈpēl\ என்றும், apple என்பதை \ˈa-pəl\ என்றும், apple போலவே முதல் ஒலி உள்ள action என்பதை \ˈak-shən\ என்றும் மெரியம் அகராதி பலுக்கல் சுட்டுகின்றது. எனவே Halogen என்பதை ஆலசன் எனலாம். ஒலிப்புத் துல்லியம் வேண்டும் எனில் °ஆல'சன் என்றோ 'ஆல'சன் என்றோ சுட்டிக்காட்டலாம். ஃஆல'சன் என்பதைத்தான் நான் °ஆல'சன் என்று இங்கு எழுதியுள்ளேன். --செல்வா 14:46, 19 டிசம்பர் 2008 (UTC)
ஆலசன் என்று கட்டுரையின் தலைப்பை மாற்றலாமா என்பது பற்றி கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன். ஹாலஜன் என்பதற்கு வழிமாற்று இருக்கும். எனவே அப்படித் தேடுவோருக்கும் கிட்டும்.
மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 17:22, 19 டிசம்பர் 2008 (UTC)

ஹாலஜன் என்று ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. அருள்கூர்ந்து அதிலில்லாமல் இங்குள்ள செய்திகளை சேர்த்த்து ஹாலஜன் என்னும் கட்டுரையில் இட வேண்டுகிறேன்.--செல்வா 14:49, 19 டிசம்பர் 2008 (UTC)

செல்வா, ஆலசன் எனவே மாற்றலாம். நீங்கள் ஏற்கனவே ஹாலஜன் கட்டுரையை எழுதியுள்ளீர்கள். ஆனால் அதற்கு எந்த வித ஆங்கில விக்கி இடையிணைப்புகள் எதுவும் தரப்படவில்லை. அதனால் இவ்விளைவு. சுந்தர் தனது தானியங்கியை இப்போது இயக்குவதில்லையா? தமிழ்க் கட்டுரைகள் பல ஆங்கில விக்கிக்கு இணைப்பு இருந்தும் அங்கு இணைப்புத் தரப்படுவதில்லை. இதனால் பல கட்டுரைகள் இப்படியாக இரண்டு தடவைகள் எழுத வேண்டி வருகிறது. சுந்தர் இதனைக் கவனிக்க வேண்டும். நன்றி.--Kanags \பேச்சு 21:56, 19 டிசம்பர் 2008 (UTC)
மன்னிக்கவும், விடுபட்டுள்ளது! முதலில் இந்த இரு கட்டுரைகளையும் இணைத்து, பின்னர் தலைப்பை மாற்றுவோம், பின்னர் பிற விக்கி இணைப்புகள் தருவோம். சுட்டிக்காடியமைக்கு நன்றி.--செல்வா 22:01, 19 டிசம்பர் 2008 (UTC)
நான் முன்னர் எழுதிய கட்டுரையின் தலைப்பை ஆலசன் என மாற்றி விக்கி இணைப்புகளையும் தந்துவிட்டேன். அதில் இல்லாத செய்திகளை இங்கிருந்து அங்கு சேர்க்க வேண்டும். உழைப்பு நல்கிய இக் கட்டுரையாளரின் பங்குகளையும் வரலாற்றில் காட்ட வேண்டும். சுந்தர் முன்னர் உதவி செய்தார், அதனை நான் இன்னமும் படித்துக்கொள்ளவில்லை. பழக்கம் இருப்பவர்கள் செய்து தர வேண்டுகிறேன். நன்றி --செல்வா 22:20, 19 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆலசன்&oldid=2529654" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆலசன்" page.