பேச்சு:ஆல்பிரட் டென்னிசன்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Mariano Anto Bruno Mascarenhas

ஆல்பிரடு டென்னிசன், 1ம் டென்னிசன் பிரபு (Alfred Tennyson, 1st Baron Tennyson, 6 ஆகத்து 1809 – 6 அக்டோபர் 1892) இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களில் ஒருவராவார். இவர் 1850 முதல் 1892 இல் இறக்கும் வரை விக்டோரியா மகாராணியின் அரசவையில் அரசவைக் கவிஞராக இருந்தார். இன்றளவும் செல்வாக்கு மிக்க கவிஞராக மதிக்கப்படுகிறார்.

சரி! "மனிதர்கள் வருவார்கள், மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் சென்று கொண்டேயிருப்பேன்" என்ற வரிகள் மிகவும் பிரபலமடைந்து பலராலும் பல நேரங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.) ஆமா சந்தியில் இருக்கும் பெட்டி கடைக்கும் மனிதர்கள் வருவார்கள், மனிதர்கள் போவார்கள் தானே! மனித வாழ்க்கையோடு இம்மேற்கோளை எடுத்துக்கொண்டால், மனிதர்கள் வருவார்கள் (பிறப்பார்கள்), மனிதர்கள் போவார்கள் (இறப்பார்கள்) என பார்த்தாலும் "ஆனால் நான் சென்று கொண்டேயிருப்பேன்" என்பது "நான் (நான் மட்டும்) வாழ்ந்துக்கொண்டேயிருப்பேன்" என்பது போன்றல்லவா வருகிறது. லாஜிக்கு சரியா இல்லையே சார்.

ஆல்பிரடு டென்னிசனின் பின்புலம் என்ன? எப்படி அரசவை கவிஞரானார்? எப்படி இன்றளவும் செல்வாக்கு மிக்க கவிஞராக மதிக்கப்படுகிறார்? என்று ஒன்றுமே விளக்கமாக எழுதாமால் இடையில் சப்பையா ஒரு மொக்கை மேட்டரை மட்டும் எழுதிவிட்டு சென்ற அந்த மொக்கச்சாமி யாரு சார்? முழுசா எழுதங்க சார் அப்பதான் புரிஞ்சுக்க முடியும். இல்லைனா "அரை வைத்தியன் கொலைகாரன்" என்பது போல் ஆகிவிடும் --Vaarana18 (பேச்சு) 10:24, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் குறைந்தது மூன்று வரிகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதற்கு மேல் யார் வேண்டுமானாலும் இயன்றளவு கொஞ்சம் கொஞ்சமாக கூட கட்டுரையை விரிவாக்கலாம். //மொக்கச்சாமி யாரு சார்? //, //"அரை வைத்தியன் கொலைகாரன்" // போன்ற தனிநபர் தாக்குதல்கள் தொடர்ந்தால் உங்கள் கணக்கை முடக்க வேண்டி வரும்.--இரவி (பேச்சு) 14:22, 8 அக்டோபர் 2013 (UTC)Reply
:) புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 05:07, 9 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "ஆல்பிரட் டென்னிசன்" page.