பேச்சு:ஆவணக் காப்பகம்

Archive என்ற சொல்லுக்கு ஆவணக்குவை என்ற சொல்லை மொழிபெயர்ப்பு வல்லுனர் மணிவேலு அவர்கள் பரிந்துரைக்கிறார். காப்பகம் என்பது புலிக் காப்பகம், சிறுவர் காப்பகம் என்ற கருத்து சூழலிலேயே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் சுட்டுகிறார். archival science என்பதை ஆவணக்குவையியல் என்று கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆவணக் காப்பகம் என்பதை நாம் ஆங்கிலத்தில் நேரடியாகப் பார்த்தால் Document protection என்ற பொருளையே பெரிதும் தருகிறது. --Natkeeran (பேச்சு) 03:03, 9 மார்ச் 2012 (UTC)

குவை என்பது முற்காலத்தில் அம்புகளை சேர்த்து வைக்கும் நீளமான கூடையைக் குறித்தது. இதனைத் தோளில் அணிவர். குவி--> குவை என்பது சேர்த்து வைப்பது என்பதால் குவை என்பதை மட்டுமே கூடப் பயன்படுத்தலாம். காப்பகம் என்பது தேவையானபோது பார்ப்பதற்காக சேமித்து, காத்து வைப்பது எனவே காப்பகம் என்பதும் சரியே. குவை என்பது நல்ல சொல். பயன்படுத்தலாம்.--செல்வா (பேச்சு) 03:32, 9 மார்ச் 2012 (UTC)
கருத்துக்களுக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 03:34, 9 மார்ச் 2012 (UTC)

@Karthix: வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பங்களிப்பதற்கு நன்றி. இக்கட்டுரையை மீண்டும் ஒரு படித்துப் பார்த்தால், நீங்களே திருத்தக் கூடிய சில பிழைகள் தென்படும். அவற்றைக் களைந்து கட்டுரையை மேம்படுத்த வேண்டுகிறேன். அதன் பிறகு போட்டியில் கணக்கில் கொள்ளப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 13:21, 30 ஏப்ரல் 2018 (UTC)

Start a discussion about ஆவணக் காப்பகம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆவணக்_காப்பகம்&oldid=2517408" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆவணக் காப்பகம்" page.