பேச்சு:ஆஸ்திரேலியா (பக்கவழி)

விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

ஆத்திரேலியா என்பது ஆத்திரம் என்ற சொல்லை ஞாபகப் படுத்துகிறது. ஆசுத்திரேலியா என்றால் ஓரளவு, அதன் ஒலியுடன் ஒத்துவருமென்றே எண்ணுகிறேன்.உங்களின் கருத்தறிய ஆவல்.07:49, 12 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


ஆகஸ்டு - ஆகத்து, பாலஸ்தீனம் - பாலத்தீனம், ஜூலை - சூலை, ஜூன் - சூன்.--Kanags \உரையாடுக 08:40, 12 சூலை 2011 (UTC)Reply

தமிழில் இக்கிரந்த எழுத்துக்களை வலிந்து இடர்பட்டு தவிர்க்கவேண்டிய அவசியம் யாது? இவ்வளவு கடுமையாக அதனை தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை. மணிப்பிரவாக நடையில் அமைந்த தமிழை தவிர்த்தல் நன்றே. அதற்காக இவ்வாறான பெயர்ச்சொற்களில் வரும் இவ் உச்சரிப்புக்களை வலிந்து இடர்பட்டு தவிர்க்கவேண்டிய அவசியமில்லை என்பது என்கருத்து. ஏனெனில் சில சொற்களை அப்படியே வெளிப்படுத்துவதற்கு தமிழில் வரிவடிவம் இல்லை என்பதனை அறிந்தே பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தம் என்னும் இவ்வரி வடிவத்தை உருவாக்கினர். அவுஸ்றேலியா என்பதனை ஆத்திரேலியா என்றாலும் ஆசுத்திரேலியா என்றாலும் பொருத்தமில்லை. பெயர்ச்சொல்லை அதே போன்றுதான் உச்சிரிக்கவேண்டும். மேலும் ஜூலையை சூலை என்று உச்சரித்தால் சூலை நோய்க்கும் சூலை மாதத்திற்கும் என்ன வித்தியாசம். ஒரு சொல் பல கருத்தா? நமது பிள்ளையின் பெயரை கிரந்த எழுத்தின்றி வைக்கலாம். மற்றான் பிள்ளையின் பெயரில் கிரந்த எழுத்து உண்டென்பதற்காக அதனை மாற்றிக் கூப்பிடலாமா? இது எனது கருத்து. விக்கிப்பீடியர்கள் இது பற்றி சற்று நிதானமாக சிந்திப்பது நன்று. --Santharooban 09:24, 12 சூலை 2011 (UTC)Reply

Return to "ஆஸ்திரேலியா (பக்கவழி)" page.