பேச்சு:ஆ. பு. வள்ளிநாயகம்

ஆ. பு. வள்ளிநாயகம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஆ. பு. வள்ளிநாயகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழக எழுத்தாளர்களில் ஒரு தலை சிறந்த எழுத்தாளர், பகுத்தறிவாளர் மற்றும் அம்பேத்கரிய சிந்தனையாளர். இவர் முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரின் மானுடத்தில் கோலேச்சியவர்கள் பவுத்தர்கள் மற்றும் தலித் முரசுவில் இவர் எழுதிய அம்பேத்காரின் ஆசான் புத்தர் என்னும் தொடர் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. இதுவே இவர் கடைசி நூலாகும். இவரின் உடல் நிலை கோளாறால் தனது 51 அகவையில் 2006 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மானுடத்தில் கோலேச்சியவர்கள் பவுத்தர்கள் என்னும் நூலில் தாழ்ந்தபட்டவர்களின் வரலாறை புதிய கோணத்தில் தந்துள்ளார். புத்தரை பாலி மொழி பேசிய திராவிடர் என்பதற்கு பல சான்றுகளை அளிக்கிறார். மேலும் தமிழ் மற்றும் பாலி மொழிகளின் இலக்கண ஒற்றுமைகளை எடுத்துரைக்கிறார். கி.பி மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆட்சி புரிந்த களப்பிரர்கள் பறையர் எனப்படும் மறையர் என தக்க சான்றுகளுடன் விளக்குகிறார். மேலும் களப்பிரர்கள் மக்களிடையே ஒற்றுமையும் பொதுவுடைமை கருத்துகளுடன் ஆட்சி புரிந்தனர் என விளக்குகிறார். இவர்களின் ஆட்சியில் தான் பல சங்க நூல்கள் மற்றும்திருக்குறள் எழுதப்பட்டது. களப்பிரர்கள் பொதுவுடைமையேய் பேணியத்தோடு புத்தரின் கொள்கைகளை முழுமையாக அமுல்படுத்தினர் என தெரிவிக்கிறார். இதனால் பாதிப்படைந்த சில மக்கள், களப்பிரர்களின் ஆட்சியேய் அழிப்பதற்கு பல்லவர்களை ஊக்குவிக்கின்றனர். முடிவில் தோற்க்கடிப்பட்ட களப்பிரர்களை அடியோடு அழிந்ததொடு அவர்களின் வரலாறை சுவடு இல்லமால் ஆக்குகின்றனர். அதனால் தான் அவர்களின் காலம் இருண்ட காலம் இன்று வரை விளம்புகின்றனர் என வள்ளிநாயகம் அறிய தருகிறார். மேலும் களப்பிரரை பின்பற்றிய மக்கள் இந்து மதத்துக்கு மாறுமாறும், அப்படி மாறாதவர்களை தீண்டபடதவர்களாக மாற்றப்பட்டு ஊருக்கு வெளியில் தள்ளபடுகிறனர் என தனது ஆய்வின் மூலம் அந் நூலில் தருகிறார்.

அம்பேத்காரின் ஆசான் புத்தர் என்னும் நூலில் புத்தரின் வாழ்வையும் ஏன் அம்பேத்கார் புத்த மதத்தை தேர்தெடுத்து மதம் மாறினார் என விளக்குகிறார்.

இவரின் நினைவு நாளன்று தமிழ் எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், யாழன் ஆதி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் கலந்து கொண்டு புகழுரை சூட்டினர். அழகிய பெரியவன் " இவரின் இழப்பு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், இறப்பதற்கு முன் அடித்தள மக்களுக்காக தன் வாழ்வை உரிதாக்கிய தேக்கம்பட்டி பாலசுந்தர ராசு பற்றி நூல் எழுதலாம் என எண்ணி இருந்தார்" என தெரிவித்தார்.

மேற்கோள்கள்:

தொகு

தலித் முரசு - சமுக நீதி திங்களிதழ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆ._பு._வள்ளிநாயகம்&oldid=4071088" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆ. பு. வள்ளிநாயகம்" page.