பேச்சு:இசநமி

நா என்பது தவரான உச்சரிப்பு. என வரவேண்டும். ஸ வை ச கொண்டு பிரதியீடு செய்வதையும் கருத்தில் கொள்ளவும்.--டெரன்ஸ் \பேச்சு 08:42, 23 டிசம்பர் 2007 (UTC)

தெரியும். எனினும் இசனாமி என்பது ichanami என தவறாக ஒலிக்க வாய்ப்புள்ளதால், இவ்வாறு மொழி பெயர்த்தேன். மேலும் ザ (za) கட்டகனாவை ஒலிப்பை ஸ ஓரளவுக்கு பொருந்துமாறு இருந்தது. இஸநமி என்று தான் மொழிப்பெயர்க்கவேண்டும் என இருந்தேன்(கட்டகனாவில் அவ்வாறே இருந்தது. நீண்ட ஒலிப்புக்க்கான - குறி இல்லை). எனினும் என்னுடைய ஜப்பானிய TTS இதை இஸநாமி என படித்தது. எனவே தான் அதை இஸநாமி என மொழிப்பெயர்த்தேன். TTS தவறு செய்து விட்டது போலும். மன்னிக்கவும். மாற்றிவிடுகிறேன்.

பி.கு: எனக்கு ஜப்பானிய மொழி தெரியாது. ஏதோ எழுத்துக்கூட்டி ஹிரகனா கட்டகனாவை படிப்பேன் அவ்வளவுதான். தவறு இருப்பின் தயை கூர்ந்து பொறுத்துக்கொள்ளவும் வினோத் 08:57, 23 டிசம்பர் 2007 (UTC)

வினோத், தமிழில் இசநமி என்று எழுதுனாலோ, இசனமி என்று எழுதினாலோ, "isanami" என்றுதான் ஒலிக்க வேண்டும். பசி, இசை, பசை, கசி, மசி, பாசனம் என்னும் சொற்களைப் பார்க்கவும். தமிழில் வல்லின மெய்யெழுத்து முன்னர் வராமல் சகரம் வலித்து ஒலிக்கவே கூடாது (தமிழ் எழுத்துக்களில் எழுதும் பொழுது வேற்றுமொழிச்சொல்லாயினும் இம்முறைதான். ) எனவே இசநமி என்று டெரன்ஸ் கூறியபடி எழுதுதல் சரியாக இருக்கும்.--செல்வா 23:26, 23 டிசம்பர் 2007 (UTC)

எனினும் za ஒலியை குறிக்க வேண்டுமல்லவா ? Zenக்கு ஸென் என்ற ஒலிபெயர்ப்பு வழக்கில் உண்டு. அதனால் நான் za ஒலியை குறிக்க ஸ'வை பயன்படுத்தினேன் வினோத் 07:00, 24 டிசம்பர் 2007 (UTC)

வினோத், ஸ என்பதை z என்பதற்கு என்றுதான் இருக்க வேண்டும் என்று ஏதும் முறை இல்லை. (1) முதல் எழுத்து காற்றொலி சகரங்களில் ஒன்றாக இருப்பதால் zen என்பதை ஸென் என்றால் ஒருவாறு ஏற்கலாம் (இங்கும் Sen - Zen ஆகிய வேறுபாடு காட்ட இயலாது). ஆனால் சென் (chen ) என்று வல்லின சகரத்துடன் பலுக்குவதால் தவறில்லை. சீன, நிப்பானிய மொழிகளில் எப்படி பிற மொழி மற்றும் பௌத்த சொற்களை எழுதுகிறார்கள் என்று பாருங்கள். இப்படித் துல்லியம் பார்ப்பதால் நம் தமிழ் மொழியும், தமிழ் மொழி மரபுகளும் பெரிதும் கெடுகின்றன. அளவிறந்து கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதால், பலரும் கிரந்த எழுத்துக்கள் மீது எதிர்ப்புணர்வு கொள்ள ஏதுவாகின்றது. (2) இங்கே இசநமி என்னும் பொழுது சகரம் இரண்டாவது எழுத்தாக வருவதால் ஒலிப்பு நெருக்கம் இயல்பாகவே அமைந்துள்ளது. எனவே இசநமி என்றே இருக்க பரிந்துரைக்கின்றேன். இசநமி என்று டெரன்ஸ் கூறும்மடி மாற்ற பரிந்துரைக்கிறேன். --செல்வா 18:31, 25 டிசம்பர் 2007 (UTC)


நான் ஒன்றும் அளவிறந்து கிரந்தங்களை பயன்படுத்தவில்லை. பொது வழக்கில் உள்ளதைத் தான் கையாள்கிறேன். நான் வழக்கில் இல்லாத போன்ற எழுத்துக்களை பயன்படுத்தியிருந்தால் தாங்கள் கூறுவது நியாயம்.

கிரந்தங்களை திணிப்பது எப்படித்தவறோ அதை கட்டாயமாக நீக்குவதும் தவறு. மற்ற கிரந்தங்களை போல் இவை தானாக வழக்கிழந்தால் ஒழிய கிரந்தங்களை கட்டாயப்படுத்தி நீக்குவதை நான் ஏற்றுக்கொள்ள இயலாது. அதேபோல வடமொழிச்சொற்களை இயல்புக்குமீறி சேர்ப்பதும் தவறு தமிழ் தன்வயப்படுத்திய வடமொழிச்சொற்களை நதி மூலம் ரிஷி மூலம் கண்டுபிடித்து அகற்றுவதும் தவறு.

யார் என்ன நினைத்தாலும் சரி. இது தான் எனது இயல்பு. எனது வழக்கு பொதுவழக்கை ஒட்டியே இருக்கும். எதற்காகவும் என்னால் எனது இயல்பை மாற்றிக்கொள்ள இயலாது.

இது என்னால் எழுந்த கிரந்தத்தை குறித்த 3வது உரையாடல் (பேச்சு:மஞ்சுஸ்ரீ,பேச்சு:காம சாஸ்திரம்), வாதப்பிரதிவாதங்களின் மூலம் இந்த உரையாடலை நான் நீட்டிக்க விரும்பவில்லை. எனது நிலையை பல்வேறு வாதங்களில் நான் விளக்கி விட்டேன். விக்கி என்பது Opensource என்ற நிலையில் எழுதிய பிறகு அதை மாற்ற அனைவருக்கும் உரிமை உண்டு. தாங்கள் தலைப்பை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளுங்கள். தயவு செய்து என்னை கேட்க வேண்டாம், என்னை கேட்டால் எப்படியும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்ற நிலையில் மேலும் உரையாடலகளை உருவாக்கி மற்றவர்களின் நேரத்தை வீணடிக்க நான் விரும்வில்லை

wi
n
d

பேச்சு 12:19, 26 டிசம்பர் 2007 (UTC)

வினோத், "அளவிறந்து" என்று கூறியுள்ளது உங்களைக் குறித்தல்ல, பொதுவாக. மற்றபடி கிரந்தம் தொடர்பில் உங்களுடைய எரிச்சல் புரிகிறது. உங்களைப் போன்ற ஒரு ஊக்கம் கொண்ட பங்களிப்பாளருக்காக என்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் கொள்ளத் தயாராக உள்ளேன். வேண்டுமானால் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் கிரந்தம் பயன்படுத்துங்கள். ஆனால் ஒரேயொரு வேண்டுகோள்: மெய்யாகவே கிரந்தம் கொண்டு மிகமிகக் கூடுதலாக எழுதப்பெறும் சொற்களுக்கு மட்டும் (சீனிவாசன் சீனிவாசனாக இருக்கட்டும், ஜானகி சானகியாக வேண்டாம்) பயன்படுத்துங்கள். இதுவரை தமிழில் எழுதப்பட்டிருக்கவே இல்லாத சொற்களுக்கு (எசுபானிய மொழிச் சொற்களாகட்டும், சப்பானிய மொழிச் சொற்களாகட்டும், வடமொழிச் சொற்களாகட்டும்) இவற்றைப் பயன்படுத்துவது தேவையற்றது. துல்லியம் பொருட்டு அந்தந்த எழுத்துமுறைமைகளில் அடைப்புக்குறிக்குள் தரலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்றவர்களும் உடன்பட்டால் நீங்கள் இனிவரும் கட்டுரைகளில் இவ்வாறு பயன்படுத்தலாம்.
தனிப்பட்ட முறையில் தமிழ் சொற்களல்லாதவற்றைப் பற்றி நான் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. இருப்பினும் தமிழில் எழுதும்போது மரபிற்கு மாறான எழுத்தும் ஒலிப்பும் வேதனையளிக்கிறது. இது மொழிச்சிதைவே. தவிர பொதுப்பயன்பாடு எல்லா இடங்களிலும் உங்கள் அல்லது எனது கணிப்பை மட்டும் ஒத்திருக்கப் போவதில்லை, ஆனால் பொருத்தமான எழுத்து முறை ஒன்றுதான். இது பௌத்தம் தொடர்பில் ஏற்படுவது சற்றே முரணானது. சமசுகிருதம் ஒரு உருவாக்கப்பட்ட மொழி, பிராகிருத மொழிகள் வழக்கில் இருந்தவை என்பதால் அவற்றில் பரப்பப்பட்டு அதன்வழி பெரும்வெற்றியைக் கண்ட சமயம் பௌத்தம். இன்று வேற்றுமொழிகள்மீது பௌத்தத்தின் பெயரால் மாற்றம் கொணர முயல்வது ஒரு வகையான உணர்வை ஏற்படுத்துகிறது. (நாம் இங்கு வலியுறுத்தும் மரபுத் தமிழ் உருவாக்கப்பட்டது அல்ல, தமிழில் ஆயிரமாண்டுகளாக விளங்கும் இருதர (diglosia) நடப்பின் வெளிப்பாடே.) மற்றபடி புத்தர் சித்தம். :-) -- Sundar \பேச்சு 13:06, 26 டிசம்பர் 2007 (UTC)
மற்றபடி இந்தத் தலைப்பில் கிரந்தம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ze ஒலிக்கு ஸெ என்பது வடமொழி அளவிற்கு பொதுப்பயன்பாட்டில் இல்லை. -- Sundar \பேச்சு 13:08, 26 டிசம்பர் 2007 (UTC)

//இன்று வேற்றுமொழிகள்மீது பௌத்தத்தின் பெயரால் மாற்றம் கொணர முயல்வது ஒரு வகையான உணர்வை ஏற்படுத்துகிறது//

தங்கள் கூற்றின் படி நான் தமிழின் மரபை மாற்றுகிறேன் அல்லவா. நல்லது. என்னால் தமிழுக்கு இனி என்னால் எந்த மரபு மாற்றவும் வராது. நன்றி.

wi
n
d

பேச்சு 15:53, 26 டிசம்பர் 2007 (UTC)


சுந்தர் தாங்கள் மேற்கூறிய வரியில் என்ன கூற வருகிறீர்கள் என்பதை தயவு செய்து வெளிப்படையாக கூறவும் :-)

wi
n
d

பேச்சு 18:17, 26 டிசம்பர் 2007 (UTC)

தவறாக எடுத்து விட்டீர்களா? 'irony' என்பதற்கு சட்டென தமிழ்ச்சொல் (முரண் நகை) நினைவிற்கு வரவில்லை, அதனால்தான் "ஒரு வகையான உணர்வை ஏற்படுத்துகிறது" என்று கூறினேன். இது போன்ற ஊடகங்களில் உரையாடும்போது அழுத்தம் (m:Wikistress) ஏற்படுவது இயல்பு. அதனால் நாம் கூடுதலாக அடுத்தவர் நல்லெண்ணத்தில்தான் குறிப்பிட்டிருப்பார் (en:WP:AGF) என்று கொள்ள வேண்டியுள்ளது. -- Sundar \பேச்சு 03:36, 27 டிசம்பர் 2007 (UTC)
ஏங்க, திடீர்னு உங்க கிட்ட வந்து ஒருத்தர் "உங்கள பாத்தா எனக்கு ஒரு மாதிரி தோணுதுன்னு" சொன்னா, நீங்க என்ன நெனப்பீங்க ? எனக்கும் அது மாதிரி தானங்க இது இருக்கும். கொஞ்சம் எனக்கும் பொறும இருந்திருக்கனும் அவசரப்பட்டுட்டேன்.Its just that, I always tend to do stuff like these in Haste, for which I would repent later. Thats my Nature(I just gotta live with it!!No other go). Anyways sorry for the Mis-Understanding on my side :-)
wi
n
d

பேச்சு 08:53, 27 டிசம்பர் 2007 (UTC)

இது போன்ற புரிதல் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பே! Don't worry, this could happen with everyone. -- 09:46, 27 டிசம்பர் 2007 (UTC)

Start a discussion about இசநமி

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசநமி&oldid=3173107" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசநமி" page.