பேச்சு:இசுத்திரிப் பெட்டி

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

இந்த பெயர் சற்று கடுமையானதாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன் . அழுத்தி என்பதை விட வழக்கில் உள்ள சலவை என்ற சொல்லை சேர்த்தால் என்ன . எளிதில் புரிந்துவிடும் . மின்சார சலவை பெட்டி . அல்லது அதைப் போன்று. -இராஜ்குமார்

இசுத்திரிப் பெட்டி என்றும் கூறுவர். ஆனால் அது தமிழ்தானா எனத் தெரியவில்லை.--சிவக்குமார் \பேச்சு 18:40, 17 ஆகஸ்ட் 2009 (UTC)
இசுத்திரிப் பெட்டி சமசுகிருதம் என்று நான் நினைக்கிறேன் . -இராஜ்குமார்
இஸ்த்ரி என்பதன் வரலாறு தெரியவில்லை. இசுத்திரி "போடும்" தொழிலாளிகள், "குடுங்க ஐயா, தேய்ச்சுத் தரேன்" என்று கூறுகிறார்கள். தமிழில் இசுத்தல் என்றால் இழுத்தல், வழுக்கி இழுத்தல். இசும்பு என்றால் வழுக்கும் நிலம். இது பற்றி ஒருசில முறை விக்கியில் உரையாடி உள்ளோம். சென்னையில் இசுத்துகினு போறான் என்பது தவறல்ல, சிரிது கொச்சை அவ்வளவுதான். இசுத்துக்கொண்டு போகிறான் என்பது நல்ல தமிழ் என்று கூறியிருக்கின்றேன். இவ்வடிப்படையில் இசுப்பெட்டி, இசுத்திப் பெட்டி எனலாம். இசுத்திரிப் பெட்டி என்று தலைப்பிட்டு உள்ளே தெளிவான விளக்கமும் தரலாம். --செல்வா 19:48, 17 ஆகஸ்ட் 2009 (UTC)
நான் கூறிய உரையாடல் பேச்சு:சிலெட் நாய் என்னும் பக்கத்தில் உள்ளது.--செல்வா 20:06, 17 ஆகஸ்ட் 2009 (UTC)
  • தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இதைத் தேய்ப்புப் பெட்டி என்று சொல்கிறார்கள். எனவே தேய்ப்புப் பெட்டி எனத் தலைப்பிட்டு கட்டுரையில் தேய்ப்புப் பெட்டியை இசுத்திரிப் பெட்டி என்று சொல்வதும் வழக்கத்தில் உள்ளது எனக் குறிப்பிடலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 00:52, 3 திசம்பர் 2010 (UTC)Reply
  • எங்கள் சேலம் மாவட்ட ஊர்களில் சலவைப் பெட்டி என்றும் கூறுவர்.----≈ உழவன் (உரை) 07:24, 14 பெப்ரவரி 2015 (UTC) 15:33, 14 பெப்ரவரி 2015 (UTC)
Return to "இசுத்திரிப் பெட்டி" page.