பேச்சு:இடுப்பு வளையம்

இடுப்பு வளையம் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

pelvic bone, pelvis, hip bone

தொகு

இடுப்பெலும்பு என்பது hip bone என்பதைக் குறிக்கப்பயன்படுத்தலாம். pelvic bone எனும் சொற்பதத்தை புறக்கணிக்கலாம், pelvic bones என்று பன்மையில் அமையவேண்டும். Bony pelvis என்பதுதான் ஆங்கிலத்தில் சரியாக இருக்கிறது, இதன்படி இடுப்பை ஆக்கும் எலும்புகள் என்று பொருள் எடுக்கவேண்டும். (இடுப்பாக்கு எலும்புகள்)

மாறாக, pelvis என்றால் இடுப்பு, pelvic girdle என்றால் இடுப்பு வளையம் சரியான சொற்கள். இதனை ஆக்கும் எலும்புகள்:
  • இரண்டு இடுப்பெலும்புகள், (2 hip bones)
  • திருவெலும்பு, (sacrum)
  • குயிலலகு எலும்பு / வால் எலும்பு (coccyx)

sacrum சொற் பிறப்பு

தொகு

Latin sacer, "sacred", a translation of the Greek hieron (osteon), meaning sacred or strong bone

sacred = புனிதத்துவம், மரியாதைக்குரிய ===> திரு + எலும்பு (இலத்தின்)

இது ஒரு நேரடி மொழிபெயர்ப்பாக உள்ளது, இதை விட்டு வேறு ஏதாவது பெயர் உருவாக்கலாம், தற்போதைக்கு திருவெலும்பு என்று இருக்கட்டும் எனக் கருதுகிறேன்.

Greek κόκκυξ and means "cuckoo",[1] referring to the curved shape of a cuckoo's beak எனவே, குயிலலகு எலும்பு / வால் எலும்பு இரண்டில் ஏதாவது ஒன்று உபயோகிக்கலாம்.

ஆய்வுக்கு

தொகு

பின்வருவன ஆராயப்படவேண்டியது: (ஒவ்வொரு இடுப்பெலும்பும் 3 எலும்புகளால் ஆனது.)

ilium = புடைதாங்கி ; (Latin (ile, ilis), meaning "groin" or "flank.) ?
ischium = நாரியம் ; ?
pubic bone = பூப்பென்பு (இது சரியானது)

பின்வருவனவற்றின் தமிழ்ப் பதம் தேவை: (தமிழ் விக்சனரியில் குழப்பமாக உள்ளது)

groin = ?
loin = ?
flank = ?
இடுப்பு, இடை, நாரி, பிட்டம்
--செந்தி//உரையாடுக// 14:24, 5 சூன் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடுப்பு_வளையம்&oldid=785007" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இடுப்பு வளையம்" page.