பேச்சு:இணைக்கையில் தலைகீழாகும் தோற்றமுரண்

இணைக்கையில் தலைகீழாகும் தோற்றமுரண் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

paradox

தொகு

Paradox என்பதற்குக் கலைச்சொல்லாக முரண்தோற்ற மெய், முரணொத்த மெய் போன்றவை உள்ளன. முரண்பாடு என்றால் ஒரு உள்ளார்ந்த பொருந்தாமையினால் வரும் பிழை (contradiction) இருக்க வேண்டுமா? அப்படியெனில் paradox என்ற சொல்லுக்கு நான் அந்தப் பொருளில் பயன்படுத்தியுள்ளது தவறானது. ஏனெனில் இங்கு பிழை இல்லை, பொருந்தாமை இருப்பது போன்ற போலித்தோற்றமே உள்ளது. முரண் போலி எனலாமா? -- சுந்தர் \பேச்சு 06:44, 30 ஆகத்து 2012 (UTC)Reply

பேரடாக்ஃசு என்பது சிறிதே மாறுபடும் பொருள்களில் ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றார்கள்.. சில இடங்களில் irony என்பது போன்ற சொற்பொருளிலும் பயன்படும். கணிதம் போன்றவற்றில் முரண்பாடாக முதலில் தோற்றம் அளிப்பது (ஆகவே சிந்தனையைக் கிளருவது!), பிறகு அந்தத் தோற்றமுரணைக் களைவது என்பது வழக்கம். எனவே தோற்றமுரண், முரண்மயக்கு, போலிமுரண், முரணுரு (ஆனால் முரண் அன்று), பிழைமுரண் என்று பற்பல சொற்களால் குறிக்கலாம்.--செல்வா (பேச்சு) 14:09, 30 ஆகத்து 2012 (UTC)Reply
நன்றி செல்வா. இணைக்கையில் தலைகீழாகும் தோற்றமுரண் சொல்வதற்கும் எளிதாக உள்ளது போலத் தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 03:38, 31 ஆகத்து 2012 (UTC)Reply
இணைக்கையில் என்பதைச் சேர்த்து எண்ணும்பொழுது என்று சற்று விளக்கமாகக்க் கூறினால், எளிமையாக இருக்கலாம். இயைபு என்னும் சொல்லும் இங்கு பொருந்துமா எனத் தெரியவில்லை. --செல்வா (பேச்சு) 13:18, 5 பெப்ரவரி 2013 (UTC)
இயைபு எனுஞ்சொல் எனக்கும் இங்கு நிறைவுதரவில்லை, செல்வா. வேறு பொருத்தம் கூடிய சொல் தோன்றினால் பரிந்துரைக்கவேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:47, 8 அக்டோபர் 2014 (UTC)Reply
Return to "இணைக்கையில் தலைகீழாகும் தோற்றமுரண்" page.