பேச்சு:இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

பேரா வி.கே, நீங்கள் இந்த கட்டுரையை மிக அழகாக நடுநிலை கொண்டு எழுதியுள்ளீர்கள் - என் நெஞ்சார்ந்த பாராட்டுகள், நன்றிகள். பல அருமையான மேற்கோள் வரிகள் கொடுத்துள்ளீர்கள் (கம்பன், திருப்பாவை, லிங்காஷ்டகம்). ஒரேயொரு வேண்டுகோள்: இயலும் என்றால், அருள்கூர்ந்து கருத்துக்களுக்கு அடிக்கோளாக உள்ள மூல நூல்களைத் துணைநூல் (உசாத்துணை) பட்டிலில் தாருங்கள். மிக்க நன்றி.--செல்வா 11:56, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

செல்வா, நன்றி. மூல நூல்களைக்கொடுக்கலாம். ஆனால் எதைக்கொடுப்பது என்று புரியாமல்தான் விட்டுவிட்டேன். இது அடிப்படைத் தத்துவமாக இருப்பதால் அத்தனை புராணங்களும், மனுஸ்மிருதியும், இன்னும் மற்ற இந்து சமயத்தைப்பற்றி எழுதப்பட்ட அத்தனை நூல்களும் இதைத்தான் சொல்கின்றன. இருந்தாலும் ஓரிரண்டு நூல்களை சுட்டிக்காட்டுகிறேன்.

--Profvk 14:14, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

காலத்தால் முதலில் எந்நூலில் ஒருகருத்து கூறப்பட்டது என்று கொடுப்பது, படித்து மேலும் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் எந்நூலைப் (எப்பகுதியைப்) படித்தால் மேலும் தெரிந்துகொள்ளலாம் என்றும் கொடுப்பது பயனுடையதாக இருக்கும். அடிக்கோள் நூல்கள் அல்லது துணை, உசா நூல்கள் எம்மொழ்யிலும் இருக்கலாம் (சமசுகிருதம், தமிழ், செருமன், ஆங்கிலம் என்று..)

'நடுநிலை கொண்டு' என்று நீங்கள் விமரிசனம் செய்திருப்பது எதைக்கொண்டு என்று எழுதினால் எனக்கு இன்னும் மற்ற சமயக்கட்டுரைகள் எழுத உதவியாயிருக்கும். --Profvk 14:14, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

அதாவது கட்டுரையைப் படிக்கும் பொழுது கூறுபவர் எச்சாய்வும் இல்லாமல் (எடுத்துக்காட்டாக சிவனியம் (சைவ மதம்), மாலியம் (வைணவம்) என்று வேறுபாடு காட்டாமல்) கருத்தை விளக்குமுகமாக பரிவுடன் முன்வைக்கின்றார் என்னும் எண்ணம் மேலோங்க இருப்பது. உங்கள் இயல்பான நல்ல தமிழ் நடையும் நான் கண்டு மகிழ்ந்தேன். ஒரு கருத்து சிவனியத்தில் உள்ளது என்றால் அதனை அவ்வாறே கூறுவது முறை - அது சாய்வாகாது, ஆனால் கருத்தை விளக்கி எடுத்துக் கூறுவது போல் இல்லாமல் பிரச்சாரம் போல் கூறுவது ஒருபால் சாய்வாகத் தென்படும் என்பது என் கருத்து. --செல்வா 15:13, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இன்னொன்று, தமிழ் மரபில் இருவினை என்பது சிறப்பாகக் கூறப்படுவது. இது ஊழ்வினை முதலியவற்றில் இருந்து வேறானது.--செல்வா 11:58, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இது எனக்குப்புரியவில்லை. சற்று விளக்கவும். என்னுடைய தமிழ் இலக்கிய அறிவு மிகவும் குறைவு.

--Profvk 14:14, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

திருவள்ளுவர் கூறும்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
என்பதும், இதே போல மாலியம், சிவனியம் அருணகிரிநாதர் திருப்புகழ் முதலியவற்றிலும் உண்டு. நல்வினை, தீவினை என்று பொதுவாக பொருள் கொள்வர். ஆனால் மெய்யியலில் "இரு"வினை என்பதற்கு வேறு பொருள்களும் உண்டு. இரு என்றால் பெரிய (வலிய), எஞ்சி இருக்கும் வினை, இம்மை-மறுமை இரண்டிலும் சேரும் வினை, என்று பலவாறு பொருள் கொள்வர். --செல்வா 15:13, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply
Return to "இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம்" page.