பேச்சு:இந்தோனேசிய ரூபாய்
இக்கட்டுரை 2015 விக்கிப்பீடியா ஆசிய மாதத்தின் பகுதியாக உருவாக்கப்பட்டது. |
தலைப்பு
தொகுஇலங்கை, இந்தியா, பாக்கித்தான், நேபாளம், மொறிசியசு ஆகிய நாடுகளில் ரூபாய் என்பதும், இந்தோனேசியாவில் ரூபியா என்பதும், மாலைத்தீவில் ரூபியா (அல்லது ரூஃபியா) என்பதும் ஒரே சமற்கிருதச் சொல்லின் மொழித் திரிபுகளே தவிர வேறில்லை. ரூபா என்று தமிழில் கூறினாலும் அதன் மூல மொழியில் ரூப்யா என்று கூறப்படுகின்றவாறு இந்தியிலும் உருது மொழியிலும் ரூப்யா என்றே கூறப்படுகிறது. சிங்களத்தில் ருப்பியல எனப்படுகிறது. இதுவே ஆங்கிலத்தில் திரிந்து ருப்பீ என்றானது. இத்தகைய ஆங்கில, இந்தி, உருது, சிங்கள மொழி வழக்குகளை நாம் கருத்திற் கொள்ளாமலேயே தமிழில் ரூபாய் என்று கூறுகிறோம். இவ்விதத்திலேயே இந்தோனேசிய நாணயமும் மாலைத்தீவின் நாணயமும் தமிழில் ரூபாய் என்று அழைக்கப்படுவதே முறை. இலக்கணப்படி உரூபாய் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:42, 30 நவம்பர் 2015 (UTC)
bank notes
தொகுமணியன், வங்கித் தாள் என்று பயன்படுத்தாமல் நாணயத்தாள் என்றோ தாள் நாணயம் என்றோ பயன்படுத்துவது சாலச் சிறந்ததென நினைக்கிறேன். நாணயத்தாள் என்ற சொல் ஏற்கனவே புழக்கத்திலுள்ளதே.--பாஹிம் (பேச்சு) 04:48, 30 நவம்பர் 2015 (UTC)