பேச்சு:இயக்கவியல்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

இயக்கவியல் என்பது விசையியலின் பல பிரிவுகளில் ஒன்றாகும். எனவே இக்கட்டுரையை விசையியலுடன் இணைக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இது தனிக்கட்டுரையாகவே நீடிக்கவேண்டும் என்று கோருகிறேன். (Mechanics = statics + dynamics) :) --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 17:50, 4 மே 2011 (UTC)Reply

தலைப்பு பற்றி

தொகு

Mechanics என்பது The branch of physics that is concerned with the analysis of the action of forces on matter or material systems. இது அடிப்படையில் பொருட்களின் மீது செயல்படும் விசை அதன் விளைவுகளை பற்றிய் துறை. Mechanics என்பதற்கு விசையியல் என்பது சரியான இணைச்சொல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயக்கவியல் என்பது Kinematics என்ற சொல்லிற்கு சமனான சொல்லாயிருக்கும். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். --Jaekay 14:05, 11 ஏப்ரல் 2008 (UTC)

நான் ஏற்கனவே இருந்த விசையியல்,இயக்கவியல் ஆகியவற்றை ஒருங்கு படுத்தி உள்ளேன். நான் வகைப்படுத்தி இருக்கும் விதம் பின்வருமாறு:

எந்திரவியல் - Mechanics
1.இயக்கவியல் - Dynamics
2.நிலையியல் - Statics

இயக்கவியலின் இரு பிரிவுகள் 1.Kinetics 2.Kinematics என்பன. இவற்றிற்கான நேர்தமிழ்ச் சொற்கள் என்னிடம் இல்லை. Kinetics என்பதற்கு இயக்க விசையியல் பொருந்தலாம்.

நான் பின்பற்றியுள்ள பெயர்கள் தமிழ்நாடு அரசு பாடநூல்களில் கையாளப்பட்ட வண்ணம் அமைந்துள்ளன. பொதுவாக தமிழ்நாடு அரசின் பாடநூல்களில் உள்ள கலைச்சொற்களைப் பயன்படுத்துவதையே நான் பரிந்துரைக்கிறேன். அவற்றில் இல்லாத பொழுது புதிய கலைச்சொற்கள் உருவாக்க முயற்ச்சிக்கலாம். இல்லையேல் கலைக்களஞ்சியத்தின் சொல்லாட்சியில் குழப்பங்கள் ஏற்படும்.--−முன்நிற்கும் கருத்து Vrajesh ae (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

எந்திரவியல் - robotics அல்லவா? - இராஜ்குமார் 1:23 PM ரியாத் , 29 மார்ச் 2010 .

ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Mechanics எனும் சொல்லின் மூலத்தை ஆராய்ந்த போது எனக்கு கிட்டியதாவது,
From Latin mechanicus -> from Ancient Greek μηχανικός (mēkhanikos) ,from μηχανή (mēkhanē), “‘machine, tool’”)

இதன் காரணத்தாலேயே எந்திரவியல் எனும் சொல் Mechanics எனும் சொல்லுக்கு நிகராக பயன்படுத்தப் படுகிறது. தாங்கள் குறிப்பிடும் படி robotics எனும் சொல்லுக்கு நிகராக எந்திரவியல் அமையாது என நினைக்கிறேன். ஏனெனில், robot என்பது வெறும் எந்திரம் மட்டும் இல்லை அல்லவா? robotics என்பதைக் குறிக்க வேறொரு தமிழ்ச்சொல் இருக்கலாம். இருப்பின் தயவு செய்து தெரியப் படுத்தவும்.

--Vrajesh ae 17:01, 29 மார்ச் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயக்கவியல்&oldid=1912641" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயக்கவியல்" page.