பேச்சு:இயற்பியல்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இயற்பியலா ? இயல்பியலா ? --மணியன் (பேச்சு) 07:44, 28 மார்ச் 2013 (UTC)

இயற்பியல் என்றே வழங்கப்பட்டு வருகிறது. இலக்கணப்படியும் அதுவே சரியென நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:54, 28 மார்ச் 2013 (UTC)
இயல்பைப் படிக்கும் இயல் இயல்பியல். அது திரிந்து இயற்பியல் ஆகி விட்டது. இன்று பள்ளி பாட நூல்களிலும் இயற்பியல் என்றே வழங்குகிறது--இரவி (பேச்சு) 13:08, 28 மார்ச் 2013 (UTC)
இக்கேள்விக்கு எப்பொழுதோ விடை பகர்ந்த நினைவு, ஆனால் சரியா நினைவில்லை. நட என்னும் வினைச்சொல் நடப்பு, நடக்கை, நடை, நடத்தை என்று பலவாறு பெயர்ச்சொல் வடிவங்கள் கொள்ளும். வெல் என்னும் வினைச்சொல் வென்றி-வெற்றி என்று பெயர்ச்சொல் வடிவங்கள் கொள்ளும். இயல்-இயல்தல் என்பதில் இருந்து இயற்கை-இயற்பு என்றும் ஆவதாகக் கொள்ளலாம். இயற்பு+இயல் = இயற்பியல் எனக் கொள்ளலாம். இது சரியா என்று மீள்பார்வை இடவேண்டும். கல் என்பதில் இருந்து கற்பு என ஆகும். வில் என்பதில் இருந்து விற்பனை ஆவது போல் விற்பு என்றும் ஆகும் (ஆனால் இச்சொல் வடிவு ஆளப்பெறாமல் இருக்கலாம்). ஏல் (ஏற்றுக்கொள்ளல்) ஏற்பு என்று ஆகும். சொல் என்பதில் இருந்து சொற்பு என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது (சொல்லுதலைக் குறிக்கும் சொல்லாக சொற்பு என்பது சொற்புறுத்தற் குரியன என கம்பராமாயண உரையில் வருகின்றது). தனி இயல்பு நிலையை (உள்ள நிலையை) தற்பு என்று ஆண்டிருக்கின்றார்கள். இதே தற்பு என்பதை ஆணவம் என்னும் பொருளிலும் ஆண்டுள்ளார்கள்.இதே போல நல் என்பதில் இருந்து நற்பு என்னும் சொல்லையும், நோல் என்பதில் இருந்து நோன்பு என்னும் சொல் வருவது போலவே நோற்பு என்றும் நூல் என்பதில் இருந்து நூற்பு என்றும் சொற்கள் ஆக்கியுள்ளனர். வல் என்பதில் இருந்து வற்பு (வலிமை) என்றும் சொல் ஆக்கியுள்ளனர் (வற்பு+ உறுத்தல் = வற்புறுத்தல்). இன்னும் பல சொற்களைச் சுட்டலாம் எனவே இயல்-இயல்பு போல் இயற்பு என்று கொண்டு, இயற்பு + இயல் = இயற்பியல் எனலாம்.--செல்வா (பேச்சு) 20:52, 8 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயற்பியல்&oldid=1513175" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயற்பியல்" page.