பேச்சு:இராம்கர் சட்டமன்றத் தொகுதி
Latest comment: 7 நாட்களுக்கு முன் by சா அருணாசலம்
@Ramkumar Kalyani: ராம்கர் சட்டமன்றத் தொகுதி (சம்மு காசுமீர்) பக்கத்தை விக்கித்தரவில் இணைத்து உதவுங்கள். ஏனெனில் இராம்கர் சட்டமன்றத் தொகுதியும் இதுவும் ஒன்று போலத் தெரிகிறது. இரண்டு கட்டுரைகளிலும் தொகுதி எண் 69 என்று ஒன்றாகவுள்ளது. தொகுதி நிறுவப்பட்ட ஆண்டு மட்டும் வேறுபடுகிறது. --சா. அருணாசலம் (உரையாடல்) 16:50, 9 நவம்பர் 2024 (UTC)
- விக்கித்தரவில் இணைப்பது என்றால் என்ன ? அதை எவ்வாறு செய்வது? - ராம்குமார் கல்யாணி 🌿 18:03, 9 நவம்பர் 2024 (UTC)
- @Ramkumar Kalyani: விக்கிப்பீடியா:விக்கித்தரவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையை உருவாக்கிய பின்னர் அக்கரையை அதற்கு இணையான ஆங்கிலக் கட்டுரையில் இணைப்பதாகும். ஒரு கட்டுரையை மொழிபெயர்த்து உருவாக்கும் போது தானியக்கமாக விக்கித்தரவில் இணைக்கப்படும். மணல்தொட்டியில் மேம்படுத்தி ஒரு கட்டுரை உருவாக்கினால் அதை நாம் தேடிப் பார்த்து பிற மொழிக் கட்டுரையுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் இன்னொரு தடவை இன்னொரு பயனரால் அதே கட்டுரை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க விக்கித்தரவில் இணைப்பது கட்டாயமாகும்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 21:31, 9 நவம்பர் 2024 (UTC)