பேச்சு:இரிசோர்சுசாட்-2ஏ

தலைப்பு தொகு

தலைப்பு சரியா? இரிசோர்சுசாட் ஒரு தொலை உணர்வு செயற்கைக்கோளாயினும், இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் எனக் குறிப்பிடும்போது ஐ. ஆர். எஸ். (IRS)ஐக் குறிப்பதாக எனக்குத் தெரிகிறது. --சத்தியராஜ் (பேச்சு) 13:11, 20 பெப்ரவரி 2017 (UTC)

முன்பே குறிப்பிட்டபடி இது ஒரு தொலை உணர்வு செயற்கைக்கோள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் என்பதிலிருந்தே இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள்-2ஏ என்ற அமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது என்பதும் சரியே; ஆனால் அவ்வாறு பிரிக்கப்பட்ட அமைப்பின் அதிகாரப்பூர்வ பெயர் இரிசோர்சுசாட் என்பதே. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இணையத்தளத்தினை இங்கு காணலாம். ஏற்கனவே ஏவப்பட்ட ஐ. ஆர். எஸ். (IRS) வகை செயற்கைக்கோள்களை Indian Remote Sensing Satellite என்பதின் தமிழ் ஈடான இந்தியத் தொலை உணர்வு செயற்கைக்கோள் எனக் குறிப்பிட வாய்ப்பு இருக்கும் போது, இயற்கை வள மேற்பார்வைக்கென வரையறுக்கப்பட்ட இலக்கு / செயல்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட இச்செயற்கைக்கோளையும் இந்தியத் தொலை உணர்வு செயற்கைக்கோள் என பொதுவாகக் குறிப்பிடலாமா என்பதே ஐயம். அதிகாரப்பூர்வமான பெயர் இருக்கும் போது வேறு பொதுப்பெயரை ஏன் பயன்படுத்தவேண்டும். சரியாக, இச்செயற்கைக்கோளின் இரிசோர்சுசாட் என்னும் ஆங்கிலப்பெயரின் மூலம் மற்றும் பயன் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்தால் இந்திய இயற்கை வள தொலையுணர்வு செயற்கைக்கோள்-2அ என்று தான் மொழிபெயர்க்க வேண்டிவரும். விரிவான பெயர்களை கட்டுரைகளுக்கு வழங்குவதில் எதிர்க்கருத்து ஏதுமில்லை. ஆனால் எளிமையாக விளங்கிக் கொள்ளும் படியான தலைப்பினையிட்டுவிட்டு உள்ளடக்கத்தில் விரிவாக விளக்கலாமே என்றுதான் வினவுகிறேன்!
மேழும் ஓசன்சாட், கார்ட்டோசாட் போன்றவையும் இந்தியத் தொலையுணர்வு செயற்கைக்கோள்களே. செயல் சார்ந்து வேறுபடுதிக்காட்ட வெவ்வேறு பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இப்பயரிடல் மரபினை ஒத்து இல்லாமல் பொதுமையாக இந்தியத் தொலை உணர்வு செயற்கைக்கோள் என்று மட்டுமே வழங்குவது சரியா? ஏற்கனவே கார்ட்டோசாட் என்று ஒரு கட்டுரை இருக்கும் போது இரிசோர்சுசாட் என்னும் பெயருடைய கட்டுரையின் கீழ் இவ்வரிசை செயற்கைக்கோள்களை குறித்து எழுதலாமே; தொலையுணர்வு செயற்கைக்கோள்களின் செயல் சார்ந்து வகைப்படுத்த எளிதாகவும், விளங்கிக் கொள்ள எளிமையானதாகவும் இருக்கும்.
---சத்தியராஜ் (பேச்சு) 07:57, 21 பெப்ரவரி 2017 (UTC)
    • நீங்கள் குறிப்பிடுவதுபோல் இந்திய இயற்கை வள தொலையுணர்வு செயற்கைக்கோள்-2அ என்று கட்டுரையின் முதலில் கொடுத்துவிட்டு இரிசோர்சுசாட் என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் பதத்தை தலைப்பாக குறிப்பிடலாம். அதை விடுத்து தமிழ் வார்த்தைக்கான முதல் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி தலைப்பாக கொடுக்கலாமா என்ற சிந்தனையும் உள்ளது. ஆனால் ஒரு சரியான உச்சரிப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படும் போல் உள்ளது. ஆகையால் இரிசோர்சுசாட் - 2அ என தலைப்பிடலாம் என்று நினைக்கிறேன். --Muthuppandy pandian (பேச்சு) 12:35, 21 பெப்ரவரி 2017 (UTC)
:) ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் வரிசை செயற்கைக்கோள்களில் ஆங்கில ஏ, பி, சி வரிசையே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பி.எஸ்.எல்.வி.ஏவுதல் காலக்கோட்டிலும் ஆங்கில வரிசையே பயன்படுத்தப்பட்டுள்ளது. எளிதாக புரியும் வகையில் இருக்கும் என்பதால் இரிசோர்சுசாட் - 2ஏ என்னும் தலைப்பிற்கு நகர்த்துகிறேன். நன்றி. --சத்தியராஜ் (பேச்சு) 13:33, 21 பெப்ரவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரிசோர்சுசாட்-2ஏ&oldid=2191699" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இரிசோர்சுசாட்-2ஏ" page.