பேச்சு:இருகண் நோக்கி

இருகண் நோக்கி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஒளி என்னும் வினை தொகு

தமிழில் ஒளி என்பதற்கு இரு அடிப்படையான பொருள்கள் உண்டு. (1) வெளிச்சம் (light) (2) மறை, மறைத்து வை (hide). முதற்பொருள் இருளை நீக்குவதால் ஒளி, இரண்டாவது பொருள் ஒரு பொருளை கண்பார்வையில் இருந்து காணமுடியாமல் நீக்குவதால் (மறைத்து வைப்பதால்) இரண்டாவது பொருள். பொதுவாக ஒளி, ஒளித்தல், ஒளிப்பு என்னும் சொற்கள் வினையாக வந்து ஆளப்பட்டால் அது மறை, மறைத்துவை, மறைப்பு என்னும் பொருளில் வரும். ஒளிவிளக்கு ஒளி விடுவதை ஒளிசெய்தல், ஒளிர்தல் என்னும் சொற்களால் ஆள்வது மரபு. ஒளிர்பு என்றால் ஒரு பொருளைச் சூழ்ந்து ஒளி ஒளிர்ந்துகொண்டிருக்கும் அந்த சூழொளித்தன்மை. ஒளிவிடுவதை, ஒளிர்வதை ஒளி என்று வினையாக ஆள்வது கிடையாது என்று நினைக்கிறேன். ஆனால் ஒலி என்னும் சொல், ஒலித்தல் என்று வினையாக ஆளப்படுகின்றது. ஆகவே எதிரொலி, எதிரொலித்தல் என்னும் சொல்லாட்சிகள் முற்றிலும் சரியானதே. ஆனால் எதிரொளி என்பது சரியான பெயர்ச்சொல் (reflected light) என்றாலும், எதிரொளி-எதிரொளித்தல் என்னும் வினைச்சொல்லாட்சி சரியானதாகப் படவில்லை. எதிரொளிர்தல், எதிரொளிர்த்தல் என்னும் சொல்லாட்சிகள் சரியானதாக இருக்கும் . என்றாலும் ஒளி என்பது ஒளிவிடுதல் என்னும் பொருளில் வினையாக புதுப்பொருள் நீட்சியாக ஆளலாம் என்று நினைக்கிறேன். எனவே எதிரொலி-எதிரொலித்தல் என்பது போல எதிரொளி-எதிரொளித்தல்-எதிரொளிப்பு என்னும் சொல்லாட்சிகளை ஏற்கலாம் என்று நினைக்கிறேன். எதிரொளிப்பு என்பது counter-hiding or anti-hinding (இப்படி ஏதும் இருக்கின்றதா என்று தெரியவில்லை, ஆனால் encryption-decryption என்னும் பொருள்களில் வரக்கூடும்) இங்கே எதிரொளிர்ப்பு என்னும் பொருளில் ஆளலாம். இது ஏறாகாது எனில், எதிரொளிர்ப்பு, எதிரொளிர்வு போன்ற சொற்களையே ஆளலாம். ஒரே ஓர் எழுத்துதான் கூடுதல். உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.--செல்வா 18:03, 28 நவம்பர் 2008 (UTC)Reply

எதிரொளிர்வு நன்றாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 03:29, 1 டிசம்பர் 2008 (UTC)
கருத்துக்கு நன்றி, சுந்தர். எதிரொளி (reflection), எதிரொளிர் (to reflect), எதிரொளிர்தல், எதிரொளிர்வு என்பன முற்றிலும் சரியான வழகங்கள். reflected ray என்பதற்கு எதிரொளிர்க் கதிர் எனலாம். அதிர் என்பது அதிர்ச்சி, முதிர் என்பது முதிர்ச்சி என்பது போல ஒளிர் என்பது ஒளிர்ச்சி என்றும் ஆகும் என்று நினைக்கிறேன். ஆகவே "எதிரொளிர்ச்சி" என்றும் சொல்லாம். ஒளிர்ச்சி என்பதை ஒண்மை (brightness), வெளிச்சப்பாடு (brightness) போன்ற பொருட்களிலும் ஆளலாம். --செல்வா 22:40, 1 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இருகண்_நோக்கி&oldid=808864" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இருகண் நோக்கி" page.