பேச்சு:இற்றியம்


இற்றியம் என்றிருக்க வேண்டும். ஏனெனில் டகர மெய்யை அடுத்து ரகரம் வருவது பிழை.--பாஹிம் (பேச்சு) 13:34, 10 சூன் 2015 (UTC)Reply

Yttrium என்பதன் சரியான ஒலிப்பு இட்ரியம். தமிழில் இத்திரியம் என எழுதினாலும் பரவாயில்லை. இத்திரியம் என்ற சொல்லே சிறந்த சொல்லாக இலக்கணம் மீறாத ஒலிப்பாக எனக்குப் படுகிறது. இற்றியம் என எழுதினால் ஈழத்தமிழில் Yttium என ஒலிக்கும். அது தவறான சொல். தமிழகத் தமிழர் எவ்வாறு இற்றியம் என்ற சொல்லை கூறுவார்கள்?--Kanags \உரையாடுக 20:53, 10 சூன் 2015 (UTC)Reply
Yttrium என்பதை இற்றியம் என்றெழுதினால் எப்படி இட்டியமென ஒலிக்கும்? வித்தியாசம் தெரியவில்லையா? இற்றியம் என்றெழுதினால் தமிழ் நாட்டில் இட்டியமென்று வாசிப்பார்களா? இலங்கையில் அது இட்டியமென்று ஒலிக்குமென்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?--பாஹிம் (பேச்சு) 03:09, 11 சூன் 2015 (UTC)Reply
மூர்த்தி, செல்வா, ஏனையோர் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.--Kanags \உரையாடுக 11:11, 11 சூன் 2015 (UTC)Reply
பெரும்பாலான பெயர்ச் சொற்களை அவை ஒலிக்கப்படும் ஓசையின் அடிப்படையிலேயே மாற்றுகிறோம். இட்ரியம் , இத்திரியம் என்கின்ற சொற்களுடன் ஒப்பிடுகையில் இற்றியம் என்ற சொல் பொருத்தமாகத் தெரிகிறது. விக்கித் தனிமங்கள் திட்டத்தில், இட்ரியம் என்று குறிப்பிட்டிருந்த காரணத்தால் நான் இட்ரியம் என்றே பயன்படுத்தினேன்.--கி.மூர்த்தி 13:44, 11 சூன் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இற்றியம்&oldid=2536586" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இற்றியம்" page.