பேச்சு:இலங்கைத் தமிழ் பேசும் மக்கள்
தற்காலத்தில் இலங்கையில் இரண்டு குழுக்கள் உள்ளன. ஒன்று இலங்கை தமிழர்கள் எனப்படும் பழைய யாழ்ப்பாண இராச்சியத்தில் வாழ்ந்து வந்த தமிழர்களின் வழித்தோன்றல்கள். மற்றொன்று இந்தியத்தமிழர்கள் அல்லது மலை-நாட்டுத் தமிழர்கள் எனப்படும் இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக சென்ற மக்களின் வழித்தோன்றல்களாவர். இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இந்தியத் தமிழர்கள் மத்திய மாகாணங்களிலும் வாழ்கின்றனர். இவ்விரு குழுக்களும் முற்காலத்திலிருந்தே தங்களைத் தனித்தனிச் சமூகங்களாகவே பார்க்கின்றனர். 1960-களில் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி ஏறக்குறைய 50% மலை-நாட்டுத் தமிழர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப் பட்டனர். எனினும் இனப்பிரச்சினைகளின் காரணமாக இவ்விரு குழுக்களும் இணைந்து செயல்படுகின்றனர். (Suryanarayan 2001).
மேலும் அங்கு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தொகையும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. எனினும் இவர்கள் தங்களை தமிழர் இனமாக கருதாததால் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில் இவர்கள் தனி இனக்குழுவாகவே குறிக்கப் படுகின்றனர்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் - சொற்தொடர் - தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சிங்களவர் ?
தொகுசிங்களவர், பறங்கியர், வேடர் ஆகிய குழுக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொள்வதில்லை. இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் என்ற சொற்தொடர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை அடையாளப்படுத்தவே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. வேடர்களில், கரையோர வேடர் மட்டுமே தமிழைத் தாய்மொழியாக் கொண்டவர்கல். --Natkeeran (பேச்சு) 20:10, 1 மே 2014 (UTC)
- தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சிங்களவர்கள் சிலரை எனக்குத் தெரியும். இலங்கையின் மேற்குக் கரையோரமாக நீர்கொழும்புப் பகுதியினைச் சேந்தவர்கள். தமிழைத் தாய்மொழி என நான் குறிப்பிடக் காரணம் இவர்கள் வீட்டில் தமிழ் பேசுகிறார்கள். இவர்களது பெயர்கள் சிங்களம். இவர்கள் சிங்களவர்களாக மாறிய தமிழர்களாக இருக்கலாம். கோபி (பேச்சு) 02:25, 2 மே 2014 (UTC)
- இந்த ஒரு சிலருக்காக சிங்களவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எனக் கட்டுரையில் கூறியிருப்பது சரியானது தானா?--Kanags \உரையாடுக 08:13, 2 மே 2014 (UTC)
- புத்தளம், சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர் பெருமளவில் சிங்களவர்களாகியிருக்கலாம். இவ்விடயம் தொடர்பிலான ஆய்வுகள் ஏதும் செய்யப்பட்டனவா என்பதனை நான் அறியேன். வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற கதையாடலில், தொடர்ச்சியான நிலப்பரப்பு எல்லைகளை அடையாளப்படுத்தும் முயற்சியில் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர் வரலாறு மறக்கப்பட்டுவிட்டது. தமிழர்களாக இருப்பதன் ஆபத்து எத்தகைய விளைவுகளை இச்சமூகங்களில் ஏற்படுத்தியது என்பதுவும் தெரியவில்லை. இலங்கையின் பல மூலைகளிலும் வாழும் முசுலிம்களெல்லாம் தமிழ் பேசுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வலுவான இசுலாமிய அடையாளமிருப்பது அவர்களது தொடர்ச்சிக்கான காரணமாயிருக்கலாம். கதிர்காமக் கந்தனே கதரகம தெய்யோ ஆகிவிட்டார். தமிழ் பேசும் சிங்களவர் இருக்கின்றனர் என்பதனை பதிவுசெய்யாதுவிடுவது சரியானதல்ல. தமிழர்கள் பெருமளவில் பௌத்தத்தினைப் பின்பற்றியமையினை மறைத்தமையின் விளைவுகளைப் பற்றிய பதிவுகளும் தேவை. கோபி (பேச்சு) 10:56, 2 மே 2014 (UTC)