பேச்சு:இலட்சுமி சாகல்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
இவருடைய கடைசிப் பெயர் சேகல் என்று ஒலிக்க வேண்டுமோ? Sehgal என்றும் பெயர் உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் இந்த இரண்டு பெயர்களும் ஒன்றா? எழுத்துக்கூட்டல்கள்தான் வேறா? இந்தியில் लक्ष्मी सहगल = லக்ஷ்மீ ஸஹ்க3ல் என்றும் மலையாளத்தில் ലക്ഷ്മി സൈഗാൾ = லக்ஷ்மி ஸைகா³ள்ʼ என்றும் அழைக்கின்றார்கள். இவருடைய பெயரை இலட்சுமி சேகல் என்றால் சரியானதாக இருக்கும் என்பது என் கணிப்பு (உறுதியான அறிவு அன்று- காரணம் Sehgal என்னும் பெயர நான் நன்கு அறிந்த பெயர்களுள் ஒன்று. அதுதானா இது என அறியேன்). --செல்வா (பேச்சு) 01:37, 24 சூலை 2012 (UTC)
- தமிழ் ஊடகங்களின் செய்திகளில் சேகல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளார். சரியான பெயர் தெரியும்வரை இலட்சுமி சேகலுக்கு வழிமாற்று ஏற்படுத்துகிறேன்.--மணியன் (பேச்சு) 01:56, 24 சூலை 2012 (UTC)
- நன்றி மணியன்.--செல்வா (பேச்சு) 02:11, 24 சூலை 2012 (UTC)