பேச்சு:இலத்திரனியல் கலைச்சொற்கள்
Capacitor இன் பழைய சொல் Condensor இதை இலங்கையில் கொள்ளவி என்கின்றார்கள்.Conductor என்றால் கடத்தி என்கின்றாகள். Condensor மற்றும் Conductor மொழிபெயர்பில் சிறிய முரண்பாடுகள் உள்ளன போலத் தெரிகின்றது --உமாபதி 03:05, 11 டிசம்பர் 2005 (UTC)
- ஆமாம் தவறு எனதுதான். மாற்றி விட்டேன். சுட்டியதற்கு நன்றி. மின் தேக்கி தற்போது தமிழகத்தில் பாவிக்கப்படுவதாக தெரிகின்றது. மின்கொள்ளவி யும் பொருத்தமான பெயராகவே படுகின்றது. --Natkeeran 03:35, 11 டிசம்பர் 2005 (UTC)
மின் பிரித்தா சேர்த்தா எழுதுவது
தொகுமின் தடையம், மின் தூண்டி, மின் தேக்கி, மின் விளக்கு ஆகியவற்றை சேர்த்து எழுதுவது சரியா, அல்லது பிரித்து எழுதுவது சரியா (மின்தூண்டி, மின்தேக்கி, மின்தேக்கி, மின்விளக்கு)? எது வழக்கம்? --Natkeeran 18:14, 12 ஏப்ரல் 2006 (UTC)
- இவற்றைத் தடை, தூண்டி, தேக்கி என்றே மின்னியல் கட்டுரைகளில் குறிக்கலாம். மின்னியல் சாராத கட்டுரைகளில் வேண்டுமானால் மின் என்ற சொல்லையும் சேர்த்து எழுதலாம் என நினைக்கிறேன். அப்பொழுது பிரித்து எழுதினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். எனினும், நாம் அனைவரும் மிகச் சரியாக ஒரே பாணியைப் பின்பற்றி எழுதாமல், அவரவர் விரும்பும் பாணியில் எழுதிவந்தால், பின்னர் நமக்கு ஒவ்வொரு பாணியின் நிறை குறைகளும் தெரிய வரும் என்று நினைக்கிறேன். சிறந்த பாணி, சிறந்த எழுத்துமுறைமை தானாகவே பரிணமிக்கும். --Suresh jeevanandam 07:27, 13 ஏப்ரல் 2006 (UTC)
- Suresh, the style of writing can differ, but it is better to use standard set of technical words that are commonly used and/or more or less we agree upon. This is important for internal linking, and for consistancy. It is recommended not to have two article about the same thing in TWpedia; we can have internal redirects if titles differ. --Natkeeran 14:42, 13 ஏப்ரல் 2006 (UTC)
இலத்திரனியல் சொற்குழப்பங்களும் தரப்படுத்தல் தேவையும்
தொகுஇலத்திரனியல் துறையில் பல ஆங்கில சொற்கள் வரலாறு காரணமாகவோ, அல்லது பாவிப்பு பரிச்சியம் காரணமாகவோ கணித விபரிப்புக்கு அல்லது பயன்பாட்டின் உண்மை அடிப்படைக்கு மாறக உபயோகிக்கப்படுவதுண்டு. உதாரணம், கரண்ட்டை (Current) மின்காந்த சத்தி ஓட்டம் என்ற பிளையான கருத்துநிலை உண்டு. மேலும், மின் திறனையும் (Power) மின்சத்தியையும் (Energy) ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துவோரும் உண்டு. தமிழ் விக்கிபீடியாவில் ஆரம்பத்தில் இருந்து சற்று கவனமாக இருந்தால் ஒரு சீரான, தரப்படுத்தப்பட்ட ஒரு சூழலை தோற்றுவிக்கலாம். ஆனால், இதற்கு தமிழில் ஏற்கனவே நன்கு பாவிப்பில் இருக்கு சொற்களை தவிர்ப்பது கூடாது. எனவே, சொற் தெரிவுக்கு பிற பயனர்களின் தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்தால், அக் கருத்துக்களையும் உள்வாங்கி தரப்படுத்தலாம்.
- Electric Current - Flow of Charges - மின்னோட்டம், மின் அணு ஒட்டம்
- Voltage - மின்னழுத்தம்
- Electric Potential - மின்னிலை - ???
- Electric Energy - சக்தி, மின்சக்தி, ஆற்றல்
- Electric Force - மின்விசை, விசை
- Electromagnetic Energy - மின்காந்த சக்தி
- Power - திறன், மின்திறன், வலு
- Efficiency - ??? - செயற்றிறன்
--Natkeeran 00:42, 19 நவம்பர் 2005 (UTC)
இலத்திரனியல் நுட்பியல் சொற்கள் தமிழ் இணைய பல்கலைக்கழக அகராதியிலும் தொழில்நுட்பம்.காம் அகராதியிலும் கிடைக்கின்றன. இவைதவிர தமிழ் இலத்திரனியல் பாடப்புத்கங்களும் இருக்கின்றன (என்னிடம் ஒன்று மட்டுமே உள்ளது.). நிச்சியமாக பல தரமான இலத்திரனியல் தமிழ் புத்தகங்கள் தமிழ் நாட்டில் (நூலகங்களில்) கிடைக்கலாம் என்பது ஊகம், ஏன் என்றால் தமிழ் நாட்டில் பல நூறு பொறியியல் கல்லூரிகள் இலத்தினினை பயிற்றுவிப்பதால்.
இங்கு தரப்பட்டிருக்கும் பட்டியலை சற்று அலசி, கலந்துரையாடி, விரிவாக்கலாம் என்பது என் கருத்து. --Natkeeran 22:20, 13 ஏப்ரல் 2006 (UTC)
Voltage
தொகு- சீராக்கி (ஒருவழி ஓட்டமாகத்) திருத்தி- Rectifier (AC to DC)
- (Diode Rectifier (Half Bridge, Full Bridge, ஈரி திருத்தி (அரையலை திருத்தி, முழுவலை தீருத்தி), Thyristor/SCR Rectifiers (கதவ நாலி/சிலிக்கான் கட்டுப்பாட்டுக் கடத்தி (சிகக) திருத்தி), Three Phase SCR Full Bridge Rectifier மும்முக சிகக முழுவலைத் திருத்தி)