பேச்சு:இலித்தியம்
//இலித்தியம், ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து இலித்தியம் ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை பிரிகின்றன.ஒரு கிலோ இலித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர் ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில் தருகிறது. ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக இதைக் கொள்கின்றனர். இலித்தியம் சேர்ந்த கண்ணாடி வெப்பத்தைக் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது. வெப்ப மண்டலங்களில் கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் , வெப்பமானிகள் தொலைக்காட்சி பெட்டியின் சின்னத் திரை மற்றும் சூரிய ஒளி எதிரொளிப்பான் போன்றவற்றில் பயன்பாட்டுப் பொருளாகவும் இலித்தியம் கண்ணாடி பயன்தருகிறது.// --இவற்றுக்கான சான்றுகோள் தர வேன்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 15:43, 11 சூன் 2013 (UTC)
//இலித்தியம், ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து இலித்தியம் ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை பிரிகின்றன.ஒரு கிலோ இலித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர் ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில் தருகிறது. ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக இதைக் கொள்கின்றனர்.//
இது ஓர் வலைப்பதிவில் படித்தது. தேடிச் சான்றுகளை இணைகிறேன்.
//இலித்தியம் சேர்ந்த கண்ணாடி வெப்பத்தைக் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது. வெப்ப மண்டலங்களில் கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் //
- ஐக்கிய நாடுகள் கட்டிடத்தில் லித்தியம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட photosensitive glass பயன்படுத்தப்பட்டுள்ளது. [1]
//வெப்பமானிகள் தொலைக்காட்சி பெட்டியின் சின்னத் திரை மற்றும் சூரிய ஒளி எதிரொளிப்பான் போன்றவற்றில் பயன்பாட்டுப் பொருளாகவும் இலித்தியம் கண்ணாடி பயன்தருகிறது.// இந்தப் பகுதிக்கும் வலைப்பதிவில் தான் தேடவேண்டும்.சான்று கிடைக்கவில்லையெனில் நீக்கி விடுகிறேன்.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:29, 11 சூன் 2013 (UTC)
- அருள்கூர்ந்து வேதிப்பொருள்களைக் குறிப்பிடும்பொழுது -ட்டு -டு என தகுந்தவாறு தவறாமல் பயன்படுத்துகள். குளோரைடு வேறு குளோரைட்டு வேறு. குளோரைட் என்று மெய்யெழுத்தில் தமிழில் முடியக்கூடாது என்னும் விதியையையும் தாண்டி பொருளே மாறுபடும் பல நேரங்களில் சரியான பின்னொட்டு இல்லை எனில். நீங்கள் லித்தியம் ஹைட்ரைட் என்று எழுதியிருந்தது இலித்தியம் ஐதரைடு என்று நினைக்கின்றேன் (ஐதரைட்டு அன்று). இங்கே இலித்தியம் ஹைட்ரைட்(டு) என்று ஏதும் இல்லாமல் இருப்பது (நானறிய, கூகுளறிய) குழப்பத்தை எளிதாகத் தீர்க்கின்றது. ஆனால் குளோரைட்டு-குளோரைடு, சல்பைட்டு-சல்பைடு, நைதரைட்டு-நைதரைடு (நைட்ரைட்டு-நைட்ரைடு) போன்ற பலவும் வேறுபாடுகள் உள்ளவை. எனவே " டு " என்றோ "-ட்டு" என்றோ தவறாது குறித்தல் வேண்டும். தமிழில் மெய்யெழுத்தில் முடியுமாறு எழுதவும் கூடாது. அது இயலவும் இயலாது. தமிழ் விதியானது அறிவான அறிவியல் சார்ந்த விதி. --செல்வா (பேச்சு) 17:50, 11 சூன் 2013 (UTC)
குளோரைட்டு, குளோரேட் என்றே குறிப்பிடலாமே..?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:28, 12 சூன் 2013 (UTC)
- அப்படி அழைப்பது தவறு!! குளோரேட்டு ( ClO3−) வேறு குளோரைட்டு (ClO2−) வேறு, குளோரைடு (Cl−) வேறு. ஆங்கிலத்தில் -ide என்று முடிவது தமிழில் -ஐடு என்றும், -ite என்று முடிவது -ஐட்டு என்றும் ate என்று முடிவது -ஏட்டு என்றும் முடிதல் வேண்டும். இவை முழுக்க முழுக்க வேதியியலுக்காகவே. மேலும் தமிழில் வல்லின மெய்யழுத்தில் ஒரு சொல் முடியக்கூடாது. இது வரட்டு விதி அன்று, மறுக்கொணா அறிவியல் உண்மை. ஆங்கிலத்திலும் இவற்றை stop என்பார்கள். துணையான ஓர் உயிரொலி இல்லாமல் அந்த வல்லின மெய்யெழுத்தின் ஒலியைக் காட்டவே முடியாது. கேக் அன்று கேக்கு (இதில் வரும் கு என்பதின் உகரம் முற்றியலுகர அன்று. க் என்பதை ஒலிக்கத் துணையாய் இருக்கும் சிறு உயிரொலி ஆங்கில மொழியியலில் schwa என்பார்கள். கடைசி எழுத்தாக க் . ச். ட். த், ப். ற் இருந்தால் ஒலிக்கவே முடியாது. (உ)டூத் என்று சொல்லி நிறுத்திப் பாருங்கள் (உ)டூத்து என்றால்தால் த் ஒலி வெளிவரும். இவை தமிழர்கள் குறைந்தது 2500 ஆண்டுகளாக அறிந்து, முறைவகுத்துப் போற்றி வந்துள்ள உண்மை. --செல்வா (பேச்சு) 12:19, 12 சூன் 2013 (UTC)
- ஓ. மூன்றாவது உள்ளது இப்போது தான் தெரிந்தது. அப்படியே செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:56, 17 சூன் 2013 (UTC)
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Henry's Attic By Ford Richardson Bryan et al., p. 344. பார்க்கப்பட்ட நாள் 2008-08-19.