பேச்சு:இழையம்
இதற்கு சரியான தமிழ் சொல் என்ன?--டெரன்ஸ் \பேச்சு 07:48, 15 ஏப்ரல் 2007 (UTC)
tissue வின் ஒலிப்பெயர்ப்பு போல் திசு இருப்பது இன்று தான் உறைக்கிறது. எனினும் தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் உள்ள சொல் இது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது--ரவி 08:08, 15 ஏப்ரல் 2007 (UTC)
இழையம்
தொகு- இழையம்
- இழையவியல்
- மேலணியிழையம்
- தொடுப்பிழையம்
- நரம்பிழையம்
--Natkeeran 21:19, 1 ஜனவரி 2009 (UTC)
விக்கிப்பீடியாவில் பெரும்பாலான சொற்களைத் தமிழில் அமைக்கின்றோம், அதன்படி இதனையும் இழையம் என்று அழைத்தல் பொருத்தமானது எனக்கருதுகின்றேன். தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் எத்தனையோ விடையங்கள் நேரடி ஆங்கிலத்திலேயே உள்ளதை அவதானித்து உள்ளேன்.
- Epithelial tissue - மேலணி இழையம் என்பதே பொருத்தமானது, புறத்தோலியம் என்பது புற + தோல் என்று கருதக்கூடிய வாய்ப்பு உண்டு. விக்சனரியில் புறவணியிழையம் என்று கொடுக்கப்பட்டுள்ளது, இதுவும் பொருத்தமானது.
- "epi" என்பது மேலே, ஒன்றின் மீது என்று பொருள் தரும்.
http://www.thefreedictionary.com/epi-
- மேலணியிழையம் அல்லது புறவணியிழையம் என்பதே Epithelial tissueக்கு மிகவும் பொருத்தமானது.
- இப்பக்கத்தை இழையம் என்று மாற்ற கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.--சி. செந்தி 22:56, 24 மார்ச் 2011 (UTC)
- இழையம் என மாற்றிவிட்டு தேடுபவர்களின் வசதிக்கு வேண்டுமாயின் திசுவுக்கு வழிமாற்று செய்யலாம். இலங்கையில் இழையம் என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 00:08, 25 மார்ச் 2011 (UTC)
- எனக்கும் திசு என்பதைவிட இழையம் என்ற சொல்லே பொருத்தமாகப்படுகின்றது. புறத்தோலியம் என்பதை புறவணியிழையம் என்று மாற்றி விடுகின்றேன். எனக்கு உண்மையில் படித்த பல தமிழ்ச் சொற்கள் மறந்து போய் விட்டன :(. அதனால்தான் நான் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொற்களை இட்டு வருகின்றேன். அவற்றில் தவறிருப்பின் திருத்துங்கள். Cell differentiation, Ground tissue க்கு என்ன தமிழ்ச்சொல் என்பதையும் கூறுவீர்களா?--கலை 07:05, 25 மார்ச் 2011 (UTC)
எவரும் இழையம் என மாற்றுவதற்கு எதிர்ப்புக் கூறாமையால் பக்கத்தை நகர்த்துகிறேன்.--கலை 15:04, 30 மார்ச் 2011 (UTC)
- அருமையாக கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. எனக்கும் அன்று படித்த பல தமிழ்ச்சொற்கள் நினைவில் இல்லை, சிலது நினைவில் தாமதமாக வருகின்றது....எனினும் பல சொல்லாக்கங்கள் நேரடி மொழிபெயர்ப்பாகவே உள்ளன.
Cell differentiation
தொகுCell differentiation கலவேறுபாடு என்பது அதற்குரிய கருத்தை வழங்காதது போல இருக்கின்றது. (வேறுபாடு என்றால் இரண்டு வேறுபட்ட கலத்தை ஒப்பிடுதல் என்றும் கருத இடமுண்டு) இந்தச் செயன்முறை சாதரண உயிரணுக்கள் சிறப்பு உயிரணுக்களாக மாற்றம் பெறுதல் அல்லவா? எனவே அதனைக் குறிப்பிடும்வகையில் சிறப்பணு மாற்றம் எனலாம்,
- மாற்றம் என்பதற்கு விகாரம் என்றும் தமிழில் பொருள் உண்டு,
- எனவே உயிரணு விகாரம் , சிறப்பணு விகாரம் எனலாம்.
உயிரணு விகாரம் என்பது நன்றாக இருக்கிறது. mutation எனும் சொல்லிற்கு நேரடியாகவே விகாரம் என்று பயன்படுத்துவதுண்டு அல்லவா? அச்சந்தர்ப்பத்தில்
- Cell differentiation = உயிரணு விகாரம்
- mutation = மரபணு விகாரம் எனலாம்.
- விகாரம் Mutation என்பது தனியான கருத்தைத் தருவதனால், அதனுடன் குழப்பம் இல்லாமல் இருக்க, நீங்கள் முதலில் கூறியுள்ள, சிறப்பணு மாற்றம் அல்லது உயிரணு மாற்றம் என்று பயன்படுத்தினால் நல்லது என்று நினைக்கின்றேன். ஏனையோரின் கருத்துக்களும் வருகின்றதா எனப் பார்த்துவிட்டு மாற்றுகின்றேன். --கலை 22:56, 31 மார்ச் 2011 (UTC)
விகாரம் என்பதற்கு அழகற்ற என்ற பொருளே தமிழ்நாட்டில் உள்ளது. எனவே, இங்கு differentiation என்பதற்கோ mutation என்பதற்கோ பொருந்தாது. change தரும் பொருளில் இருந்து differentiation நுணுக்கமான பொருள் மாறுபாட்டைக் கொண்டுள்ளது. --இரவி 22:58, 25 பெப்ரவரி 2012 (UTC)
ground tissue
தொகுதமிழ்நாட்டு பாடப்புத்தகத்தில் "தளத்திசுத்தொகுப்பு அல்லது அடிப்படைத் திசுத்தொகுப்பு" ((Ground tissue system or Fundamental tissue system)) என்று கொடுத்துள்ளார்கள். விக்சனரியில் "அடித்தள திசு; அடியிழையம்; ஆதாரத்திசு" என்று உள்ளது;
- தள இழையம் (தளவிழையம்) எனலாம்.
-:--சி. செந்தி 22:12, 31 மார்ச் 2011 (UTC) Ground tissue system என்பதை 'அடிப்படைத் திசுத்தொகுப்பு' என்று சொல்வதாக கூறியுள்ளீர்கள். அப்படியானால், Gound Tissue என்பதனை அடிப்படைத் திசு அல்லது அடிப்படை இழையம் என்றே கூறலாம்தானே?--கலை 22:59, 31 மார்ச் 2011 (UTC)
- அடிப்படை எனும் சொல் உபயோகிக்கலாம் ஆனால் சரியாக இதற்குப் பொருந்தவில்லை என நினைக்கிறேன். எல்லா இழையங்களுக்கும் அடியில் அல்லவா இருக்கிறது? அப்படியாயின் அடியிழையம் அல்லது தளவிழையம் எனலாம் எனக் கருதுகின்றேன். வேறு யாராவது கூறினால் நல்லது.--சி. செந்தி 14:19, 1 ஏப்ரல் 2011 (UTC)
- ஆம். நீங்கள் சொல்வதுபோல் அடியிழையம் அல்லது தளவிழையம் என்பது பொருத்தமாக இருக்கும் எனவே தோன்றுகின்றது. மற்றவர்களும் என்ன சொல்கின்றார்கள் எனப் பார்க்கலாம். --கலை 23:07, 1 ஏப்ரல் 2011 (UTC)
- அடிப்படை இழையம் பொருத்தமாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:52, 1 ஏப்ரல் 2011 (UTC)
இந்த ground tissues (மாற்று கலைச்சொல் fundamental tissue) என்பது தோல், குழாய், இனப்பெருக்கத்துகானவை அல்லாத இழையங்கள் (திசுக்கள்) என்கிறார்கள். எண்டர்சனின் உயிரியல் அகராதி (13th edition of Henderson's Dictionary of Biology) கீழ்க்கண்டவாறு சொல்கின்றது: "..all tissues other than epidermis, reproductive tissue and vascular tissue.." எனவே அடிப்படை இழையங்கள் (திசுக்கள்) அல்லது அடிக்கூறு இழையங்கள் எனலாம். செந்தி, அடிப்படை என்பது எல்லாவற்றுக்கும் அடியில் (தாங்குமுகமாக) இருக்கின்றது என்னும் பொருளும் தரும். நீங்கள் பரிந்துரைத்த அடியிழை சுருக்கமாக உள்ளது எனவே அப்படிச் சொல்வதும் நன்றாகவே எனக்குத் தோன்றுகின்றது. அடிப்படை வேண்டாம் எனில் அடிக்கூறு என்றும் சொல்லலாம். --செல்வா 00:41, 2 ஏப்ரல் 2011 (UTC)
இங்கு உயிரணு என்பது 'செல்' என்ற ஆங்கில சொல்லுக்கு பொருத்தமாக இல்லை. --Boomi89 (பேச்சு) 01:22, 24 திசம்பர் 2012 (UTC)
இழையம் பெயர்க் கருத்து
தொகுஇங்கு திசுக்களுக்கு இழையம் எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இழையம் என்பது திசு என்னும் பிரஞ்சு மொழியின் நேரடிப்பொருளை யுணர்த்தினாலும் இங்குத் தேவையானப் பொருளை உணர்த்தா வண்ணம் உள்ளது. இங்கு திசு என்பது கலங்களின் கூட்டு என்பதே மெய்ப்பொருள். இழை என்பது சிற்சில இழைவடிவ கலங்கள் ஒருங்கேப் பெற்ற திசுக்களின் பண்பாகும். வேறு இடத்தில் இவை ஒவ்வாப் பொருளேத் தரும்.
- சிலர் குறிப்பிடுவதுப் போல பொதுமை என எடுத்துக்கொண்டால் திசு அல்லது திசுள் என்றே இருப்பது நன்று.
- தமிழ் வேண்டுமாயின் கலக்கூடு (அ) கலக்குப்பை (அ) கலக்கூட்டு என்று அமைதல் அதன் மெய்யை சிறார்களுக்கும் புதியவர்களுக்கும் ஏன் அறிஞர்களுக்கும் நேரடியாக உணர்த்தும் என்பது என் தாழ்மையானக் கருத்து. நன்றிகளுடன். --சிங்கமுகன் 07:15, 24 சூன் 2011 (UTC)
- Tissue இழையம் ஆனால் fibrous tissueவை எப்படி அழைப்பது? தமிழ்நாட்டில் fibre, thread போன்றவற்றுக்குத் தொடர்பாக இழை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. எனவே, இழையம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆனால், முறையாக உரையாடி பெயர் வைத்த பிறகு, வெகு தாமதமாகவே இப்பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. பொருத்தமான வேறு பெயர்களும் தோன்றவில்லை :( --இரவி 22:58, 25 பெப்ரவரி 2012 (UTC)
Fibre என்பதற்கு நார் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 02:47, 24 திசம்பர் 2012 (UTC)