பேச்சு:ஈர்ப்பு விசை
Gravitation என்பது இரு பொருட்களிடையே ஏற்படும் விசை என நிலைத்தப்பிறகும் வரலாற்றுவழியில் இதனை புவியீர்ப்பு விசை எனவே அழைக்கிறோம். இதனைப் பொருளீர்ப்பு விசை என்றோ பொருண்மைய விசை என்றோ பொதுப்படுத்தி மறுபெயரிடலாமா ? அண்மைக்கால பாடப்புத்தகங்களில் ஏதேனும் மாற்றுப்பெயருள்ளனவா?--மணியன் 10:55, 18 திசம்பர் 2011 (UTC)
- ஆம், புவியீர்ப்பு விசை என்பது பொதுப்பெயராகயில்லை. பிரபஞ்ச அளவில் உள்ள பொருள்யீர்ப்புகள் இதனுள் அடங்காது.--நீச்சல்காரன் (பேச்சு) 03:45, 17 ஏப்ரல் 2012 (UTC)
ஈர்ப்பு விசை என்பதுதான் இந்த கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும், புவியீர்ப்பு என்பது புவியின் பகுப்பில் வரலாம். காரணம்: இக் கட்டுரையில் ஈர்ப்பு விசை பற்றிய கட்டுரையாகவும், புவியீர்ப்பு கட்டுரையும் கலந்துள்ளன. நன்றி--சிவம் 07:12, 19 அக்டோபர் 2012 (UTC)
இக்கட்டுரைக்கு ஈர்ப்புவிசை அல்லது ஈர்வை எனப்பெயரிடுவதே சரி. இதில் புவியீர்ப்பு விசை என்பதை உப தலைப்பாக இடப்பட்டு உரிய பகுதிகளை விபரிக்கலாம். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:31, 19 அக்டோபர் 2012 (UTC)