பேச்சு:ஈழத்து இலக்கியம்
ஈழம் - தமிழ்- இலக்கியம்
தொகுஇப்பக்கம் சிறுகச்சிறுக முழுமைப்படுத்தப்படவேண்டியுள்ளது. "ஈழத்து இலக்கியம் " என்பதற்கான வரைவிலக்கணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். இத்தலைப்பின் கீழ் வரும் உப தலைப்புக்களையும், தொடுக்கப்பட வேண்டிய பக்கங்களையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.இவ்வுரையாடல் பகுதியில் நாம் இவை பற்றி உரையாடலாம்.
சில தலைப்புக்கள் உபதலைப்புக்களாகவா, அல்லது பிறி தொருபக்கமாக தொகுக்கப்பட்டு இங்கே தொடுக்கப்படவேண்டியதாகவா இருக்கும் என்பதுபற்றி ஆலோசனை தேவை. உள்ளிடவிருக்கும் தலைப்புக்கள்- நூற்பட்டியல், பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், வலைப்பதிவுகள் (மேலும் இதனை வளர்த்தெடுக்கவும்)
-தோழமையுடன் மு.மயூரன்
- ஈழத்து இலக்கியம் என்று ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைத்தான் கருதுகிறீர்கள் என எண்ணுகிறேன். ஈழத்துத் தமிழ் இலக்கியமென்றே தலைப்பையும் வைத்துக்கொண்டால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். நானும் என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்கிறேன். ஒரே கட்டுரையாக எழுதுவதிலும் பார்க்க, முதலில் எல்லா அம்சங்களையும் தழுவிச் சுருக்கமான ஒரு கட்டுரையை எழுதலாம். பின்னர் அதிலிருந்து இணைப்புக் கொடுத்து விவரமான பல கட்டுரைகளை எழுத முடியும். Mayooranathan 18:41, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
நீங்கள் சொல்லும் வழிமுறைதான் இலகுவானதாகப் படுகிறது. முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரைக்குரிய அமைப்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பியிடமிருந்து விக்கிப்பீடியாவுக்கென கட்டுரை ஒன்றினை பெறுவதற்கு முயன்றுஇகொண்டிருக்கிறேன்.
அதனை அடியொற்றி மேலும் பக்கங்களை இணைத்துக்கொண்டு போகலாம்..
--மு.மயூரன் 07:58, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
- மிகவும் நல்லது. உங்களுக்குச் சிவத்தம்பியைத் தெரியுமா? அவர் ஏற்கெனவே ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறார் என எண்ணுகிறேன். சென்ற ஆண்டு இலங்கை வந்திருந்தபோது சிவத்தம்பியை நான் கொழும்பில் அவரது வீட்டில் சந்தித்தேன். யாழ்ப்பாணத்துக் கட்டிடக்கலை தொடர்பாக அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் எனக்கும் அந்த விடயத்தில் மிகுந்த ஆர்வம் இருப்பதால் அவரைச் சந்தித்து அது தொடர்பாக உரையாடினேன். ஈழத்தமிழ்ச் சமுதாயம் பற்றி அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. கா.சிவத்தம்பி பற்றி ஒரு கட்டுரையும் விக்கிபீடியாவில் உண்டு. அவரிடம் தகவல்கள் பெற்று அதையும் முழுமையாக்கலாம். Mayooranathan 08:51, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
ஈழத்து இலக்கியம், இலங்கைத் தமிழ் இலக்கியம் ஈழத்து தமிழ் இலக்கியம் ஆகிய மூன்றையும் இணைத்து ஈழத்து இலக்கியம் என்று ஒரு பிரதான கட்டுரை உருவாக்கலாம். தமிழ் என்பதையே இயல்பாக குறித்து நிற்பதால் சுருக்கமாக தமிழ் என்பதை சேர்க்க தேவையில்லை. பிறரின் கருத்துக்கள் என்ன?--Natkeeran 07:08, 23 ஏப்ரல் 2006 (UTC)
அவ்வாறே செய்யலாம். இதையே முன்பும் கேட்டிருந்தேன். --கோபி 07:50, 23 ஏப்ரல் 2006 (UTC)
பேச்சு:ஈழத்து தமிழ் இலக்கியம் இலிருந்து
தொகுகட்டுரைகளை இணைக்கும் முறை
தொகுகோபி, உங்களின் நியாயத்தை, வேகத்தை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால், அதை எழுதியவர்களின் கருத்துக்களை அறிய வேண்டியது அவசியம். கட்டுரைகளை இணைக்கும் முறை ஒன்றை (ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளதை போன்று) இங்கு ஏற்படுத்த வேண்டும். அதைப்பற்றி சற்று மேலு அறிந்து, உங்களுக்கு பின்னர் பதில் தருகின்றேன். --Natkeeran 19:07, 25 மார்ச் 2006 (UTC)