பேச்சு:ஈ. வெ. கி. சம்பத்

இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் தந்தை ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன். எனும் வரி குழப்புகிறது. இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் மூத்த சகோதரரான ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன் எனலாமா ? சம்பத் பெயரைக் கேட்டாலே கலைஞரின் நெஞ்சுக்கு நீதியில் சம்பத் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 16:28, 13 சனவரி 2011 (UTC)Reply

நன்றி கார்த்தி. மாற்றிவிட்டேன். :-) இன்று அழகிரி-ஸ்டாலின் போல அன்று சம்பத்-கலைஞர். உட்கட்சிப் பூசல் தாங்க முடியாமல் அண்ணா புலம்பியுள்ளார். தனக்குப் பின்னர் பொதுச்செயலாளர் பதவியை நெடுஞ்செழியனுக்கு கொடுத்தார். நெடுஞ்செழியன் பதவிக்காலம் 59ல் முடிந்த பின்னர் யார் பொ.செ. ஆவதென்று சம்பத்துக்கும் கலைஞருக்கும் போட்டி. தம்பிகள் கட்சியை உடைத்து விடுவார்கள் என்ற பயத்தில் அண்ணாவே மீண்டும் பொ. செ ஆக நேரிட்டது. இருந்தும் இரு ஆண்டுகளுக்குள் சம்பத்-கலைஞர் மோதல் பெரிதாகி, திராவிட நாடு பிரச்சனை வழியாக பிளவாகி விட்டது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :-) --சோடாபாட்டில்உரையாடுக 16:34, 13 சனவரி 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈ._வெ._கி._சம்பத்&oldid=666728" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஈ. வெ. கி. சம்பத்" page.