பேச்சு:உயிர்ச்சத்து

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
உயிர்ச்சத்து எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
உயிர்ச்சத்து என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சில வருடங்கள் முன்பு வரை மல்டி விட்டமின் மாத்திரைகள் கொஞ்சம் அபூர்வம். இப்போது நிறைய புதுப்புது மாத்திரைகள், டானிக்குகள் வந்து விட்டன. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் இருபாலருக்கும் வெவ்வேறு வயதில் தினமும் பெற வேண்டிய விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களின் அளவை பட்டியலிட்டிருக்கிறது.


ஆனால் பத்தில் ஒருவர் தான் சரியான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களை உணவு மூலமாக பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோர் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவை உட்கொள்வதே இல்லை. இதனாலேயே தற்போது மருத்துவர்கள் அதிக அளவில் மல்டி விட்டமின்களைப் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. நீங்கள் விட்டமின் மாத்திரை அல்லது தாது புஷ்டி டானிக் உட்கொள்ள நினைத்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

விட்டமின் என்ற நீக்கபடவுள்ள பக்கத்தின் உள்ளடக்கம் மேலே குறிப்புக்காக இடப்பட்டுள்ளது. --Natkeeran 16:24, 28 ஜனவரி 2006 (UTC)

Vitamin B என்பதை உயிர்ச்சத்து பி எனலாமா அல்லது உயிர்ச்சத்து B எனலாமா? ஏனெனில் பி என்பது B, P இரண்டில் எதை குறிக்கிறது என தெரியாது. தலைப்பில் ஆங்கில எழுத்து கூடாது என்பதால் உயிர்ச்சத்து பி என்று தலைப்பை நகர்த்தி விட்டேன் நகர்த்தும் முன் உரையாடி இருக்கவேண்டும் ஆனா இப்ப தான் இந்த சிக்கல் தெரிந்தது. மற்ற உயிர்ச்சத்துகளுக்கும் இந்த பெயரிடல் சிக்கல் உள்ளது. உயிர்ச்சத்து E (இ, ஈ) உயிர்ச்சத்து D (டி - D, T) உயிர்ச்சத்து A (எ, ஏ), உயிர்ச்சத்து K (கெ, கே) ---குறும்பன் 03:16, 20 நவம்பர் 2010 (UTC)Reply
உயிர்ச்சத்து ஏ, பி', சி. டி', ஈ, கே எனலாம். அல்லது உயிர்ச்சத்து ஏ, (ம்)பி, சி, (ண்)டி, ஈ, கே எனலாம். உயிர்ச்சத்து இம்பி அல்லது இபி என்றும் உயிர்ச்சத்து இண்டி அல்லது இடி என்றும் கூடக் கூறலாம். முதல் வரியில் இலத்தீனில் எழுதி ஈடுகோளை உணர்த்தலாம். இதே போலவே குருதி வகைகளையும் குறிக்கலாம். உரோமன்/இலத்தீன் எழுத்தும் தமிழ் எழுத்தும் கலந்து பெயர் சூட்டுவதைக் கூடிய மட்டிலும் தவிர்ப்பது நல்லது. நான் பரிந்துரைத்த க' = Ga, ச'=Ja, ட' = Da, த'=dha, ப' =Ba, வ' = Fa, ழ' = /ʒ/ (பிரான்சிய மொழியில் வரும் Jean, Joule குறிக்க), இங்கெல்லாம் பயன்படலாம். ஆனால் இம்முறை இல்லாமலும் இம்பி,இபி (இம்பா, இபா) என்றும் குறிக்கலாம். முறைமை வகுத்து செயற்பட்டால் குறைவேதும் இல்லை. மெல்லொலி என்பதைக் குறிக்க ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்ற வேண்டும் (சீராக).--செல்வா 03:33, 20 நவம்பர் 2010 (UTC)Reply
  • ஏ, பி, சி. டி, ஈ, கே என்பனவே தற்போது பயன்படுத்தப்படும் சொற்கள் ஆதலால் அவற்றை எதுவித மாற்றமும் செய்யாமல் , உபயோகத்தில் இல்லாத ( கட்டுரையில் உயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள்) சொற்களுக்குச் செல்வா குறிப்பிட்டபடி மாற்றம் செய்யலாம் எனக் கருதுகிறேன், எனினும் அடைப்புக்குறிக்குள் இலத்தீன் எழுத்து இடுதல் சிறந்தது. எ.கா: உயிர்ச்சத்து பி (உயிர்ச்சத்து B) --சி. செந்தி 10:34, 20 நவம்பர் 2010 (UTC)Reply
சி.செந்தி கூறியுள்ளதன்படி ஏ, பி, சி, டி, கே எனக் குறித்து விட்டு, அடைப்புக்குறிக்குள் 'உயிர்ச்சத்து B' என்பதையும் குறிப்பிடல் நலம் என்பதே எனது கருத்தும். பலர் 'உயிர்ச்சத்து B' என்று இட்டு தேடுவார்கள் என நினைக்கிறேன். அத்துடன் 'விட்டமின் B', 'வைட்டமின் B' எனவும் அடைப்புக்குறிக்குள் கொடுத்தல் நல்லது. அப்படியும் தேடுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.--கலை 00:27, 21 நவம்பர் 2010 (UTC)Reply
ஆம் அப்படியே செய்யலாம்.என்றாலும், பொதுவாக ஆங்கில எழுத்துகளைப் பொருத்த அளவிலே, மெல்லொலி ககர, சகர, டகர, பகர ஒலிகளைக் குறிக்கும் தேவை எழலாம். இவை தமிழில் உண்டு. ஆனால் முதல் ஒலியெழுத்தாக இடும் வழக்கம் இல்லை. எப்படி நாம் இராமன், இலக்குவன் என்று எழுதுகிறோமோ, அதே போல Gaa என்பதை இகா என்றும், Jaa என்பதை இஞ்சா என்றும், Daa என்பதை இடா என்றும், Baa என்பதை இபா என்றும் எழுதலாம். எப்படி m,n என்பதை எம், என் என்று எழுதுகிறோமோ அதே போல தமிழில் இக, இஞ்ச, இட, இப (Ga, Ja, Da, Ba) என்று குறிக்கலாம். அல்லது G, J, D, B என்பதை இகி, இஞ்சே, இடி, இபி என்றும் கூறலாம். முதல் எழுத்தாகிய G என்பதை இடாய்ச்சு முதலானோர் Ji என்று ஒலிப்பதில்லை. மிக முக்கியமானது என்னவென்றால். ஒரு முறையைத் தழுவி, சீராக எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும். ஏதேனும் ஓர்டிஅத்தில் தெளிவாக இம்முறையைக் குறித்து வைத்தல் வேண்டும். B என்பதை இபி என்றால் பெரும் தவறு ஏதும் இல்லை. தமிழில் அவ்வெழுத்தை அப்படித்தான் கூறுவது வழக்கம் என்று கொண்டால் போதும். எம் என், எல் என்று கூறுவதில்லையா அது போலத்தான். வேண்டுமென்றால், எம், என், எல் என்பதுபோலவே எகி, எபி, எஞ்சி, எடி என்றும் கூறலாம். பயனர்கள் சிந்திக்க வேண்டும். உயிர்ச்சத்து ஏ, உயிர்ச்சத்து இபி, உயிர்ச்சத்து இசி, உயிர்ச்சத்து இடி, உயிர்ச்சத்து கே எனலாம். பயனர்கள் எண்ணிப்பார்க்கவும். --செல்வா 00:46, 21 நவம்பர் 2010 (UTC)Reply
J என்னும் எழுத்தைத் தமிழில் இஞ்சே என்று கூறுவது வியப்பாக இருந்தால், W என்னும் எழுத்தை டபிள்யூ என்று குறிப்பதையும் கருத்தில் கொள்க. ஒலிப்பின் அடிப்படையில் அமைந்த தமிழ் போன்ற மொழிகளில் W என்பதை இப்படித்தான் அழைத்தல் வேண்டும். ஆகவே இஞ்சே என்பது தவறல்ல. முதலில் சற்று மாறுபட்டதாகத் தெரியும், ஆனால் இது டபிள்யூ, எம், என் போன்றதே. இதே இலத்தீன் எழுத்துகள், வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாகவே குறிக்கப்பெறுகின்றன. இடாய்ச்சு மொழியர் B என்பதை Bay என்பர். நாம் இபி என்போமே! ABCDEFGHIJKLEMNOPQRSTUVWXYZ = ஏ, இபி, இசி, இடி, ஈ, எஃவ், இகி (இஞ்சி), ஃகெச், ஐ, இஞ்சே, கே, எல், எம், என், ஓ, பி, கியூ, ஆர், எசு, டி, யு, வி, டபிள்யூ, எக்ஃசு, ஒய், இசடு (அமெரிக்காவில் இசீ). --செல்வா 01:04, 21 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிர்ச்சத்து&oldid=666815" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உயிர்ச்சத்து" page.