பேச்சு:உயிர்ச்சத்து ஈ
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Sundar
சுந்தர், Haemorrhage என்பது குருதி இழப்பை தான் குறிக்கும். குருதி உறையாமையை அன்று. இது குறித்த ஆங்கில விக்கிபீடியா பக்கத்தை பார்க்கலாம். குருதிக் கசிவு, இரத்த ஒழுக்கு, இரத்தஞ்சிந்தல், குருதிப் பெருக்கு, இரத்தப் போக்கு ஆகியவை TVU அகராதியில் பரிந்துரைக்கப்படுள்ள கலைச் சொற்கள் ஆகும். நீங்கள் கணனித் துறையில் இருந்தாலும் உயிரியல் தொடர்புடைய கட்டுரைகளில் ஆர்வமும் திறமும் காட்டி வருவது வியப்பளிக்கிறது :)--ரவி (பேச்சு) 16:51, 3 அக்டோபர் 2005 (UTC)
- ஆம், என் தவறுதான். குருதி உறையாமையின் விளைவாக பெரும்பாலும் குருதி இழப்பு ஏற்படுவதால் வினையையும் விளைவையும் குழப்பிக் கொண்டேன்.
- மற்றபடி, உயிரியல் எனக்கு பிடித்த துறைகளில் தலையாயது. இந்த ஆர்வத்திற்கான காரணம் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு கூடுதல் மணம் உண்டு (அறிஞர் அண்ணா மன்னிப்பாராக) என்பதாலோ என்னவோ? :-) -- Sundar \பேச்சு 04:11, 4 அக்டோபர் 2005 (UTC)