பேச்சு:உரோமம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
உரோமம் என்பது பொதுச்சொல்லாகையால் fur என்பதன் மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கு உகந்ததல்லை எனபது எனது கருத்து. விலங்குமயிர் அல்லது விலங்குமுடி என்று தெளிவுதரலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 03:15, 31 மே 2012 (UTC)
உரோமம் என்பது வடசொல். விலங்கு மயிர் எனக் குறிப்பிட்டுக் கூறாமல் மயிர் எனப் பொதுப்படக் கூறினால் பொருத்தமாக இருக்கும். இன்னும் கட்டுரையை விரிவு செய்ய ஏதுவாக இருக்கும். (நாற்றம் எனபதை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார்களோ அதே போல் மயிர் என்ற தூய தமிழ் சொல்லும் இழிவான பொருளில் பயன்படுத்தப்படுகிறது.)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:38, 31 மே 2012 (UTC)
- இக்கட்டுரை விலங்கின் மயிரான fur பற்றியது. விலங்கு மயிர் எனத் தலைப்பிடல் நல்லது. பொதுவான மயிர் (hair) என்ற தலைப்பில் புதிய கட்டுரை தொடங்கலாம்.--Kanags \உரையாடுக 01:57, 1 சூன் 2012 (UTC)