பேச்சு:உள்ளியம் (மெய்யியல்)

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை in topic ontology

என் பேச்சுப்பக்கத்தில் ரவி விடுத்திருந்த கேள்வியும் என் மறுமொழியையும், தொடர்புடையதால் இங்கு இடுகின்றேன்.--செல்வா 19:01, 4 ஜூன் 2008 (UTC)

ontology தொகு

http://en.wikipedia.org/wiki/Ontology_(computer_science) - தமிழில் ? இருப்பியல்?--ரவி 14:53, 4 ஜூன் 2008 (UTC)

Ontology என்னும் சொல் சில மாறுபட்ட பொருள்களில் வழங்குவது. இதன் அடிப்படைப் பொருள் கிரேக்க மொழி வேரின் படி (ontos) "on being", nature and essence of existence; "ontology is the study of what actually is" என்பதாகும். எனவே தமிழில் எது உள்ளதென்று கூறுகிறோமோ அதுவே. உண்மை. ஆனால் உண்மை என்னும் சொல் உள்ளதன்மையை, உள்ளதைக் குறித்தாலும், அதுதான் ஆன்ட்டால'சி (ontology) என்றாலும், "truth" என்னும் சொற்களுடன் குழப்பம் தர வாய்ப்புள்ளது. எனவே உள்ளியம் எனலாம் (உள், உள்ளதன்மை +இயம்) . உள்ளியல் என்றும் கூறலாம். மெய்யியலிலும், கணினி கருத்தியலிலும், உயிரியல் போன்ற பிற பல துறைகளிலும் சற்றே வெவ்வேறுபட்ட பொருள்களில் இது ஆளப்படுகின்றது. பல இடங்களில் இதன் பொருள் அடிப்படைக் கூறுகள், அடிப்படை கூறுகளும் அதன் அடிப்படை உள்ளுறவுகளும் என்னும் பொருளில் ஆளப்படும். அதாவது ஒன்றைப் பற்றி அறிய அதன் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களைப் பற்றி அறிவதும், அவைகளுக்கிடையே உள்ள அடிப்படை உறவுக்கூறுகளை அறிவதும் ஒன்றைப் பற்றி புரிந்து கொள்ள உதவும் அல்லவா? இதனாலேயே, அடிப்படை சொற்களையும், அச்சொற்களின் பொருள்களையும் வரையறை செய்து ஓர் அறிவுப்புலத்தை வரையறை செய்யும் இயலை ஆன்ட்டால'சி என்கிறார்கள். ஒரு துறையின் அறிவை ஒழுங்குபட கருத்துகளாக பகுத்து, அவற்றின் அடிப்படையில் அத்துறையை (domain) அறிதல். எனவே உள்ளியியல், உள்ளியம், உள்ளடுக்கியல், உள்ளமைப்பியல், உள்ளொழுங்கியல் என்று பல இடங்களில் இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். ஆன்ட்டால'சி என்பதன் உண்மையான அடிப்படைப் பொருள் உண்மையியல் என்பதுதான் !! எனவே உண்மையியல் என்றும் கூறலாம். இன்னும் நிறைய விரித்து எழுதலாம். இது பற்றி சுருக்கமாக வேண்டுமானால் ஒரு கட்டுரையே எழுதிவிடுவோம்.--செல்வா 16:00, 4 ஜூன் 2008 (UTC)

கட்டுரையாகவே எழுதியதற்கு நன்றி. இருப்பியல் என்றால் existentialism உடன் குழப்புமே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்--ரவி 06:58, 5 ஜூன் 2008 (UTC)

Ontology-இருப்பியல், உள்ளதனியல் (தமிழில் பல்கலைகழக மெய்யியலாளர்கள் மார்க்சியர்களும் ஏற்கெனவே பயன்படுத்தும் சொல்)

Existantalism-இருத்தலியல் (தமிழில் அனைத்து மெய்யியலாளர்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் சொல். இது பெருவழக்கில் உள்ளது.) இது முக்கால இருப்பைக் கருத்தில் கொள்ளாது நிகழ்விருப்பை மட்டுமே கருதுவதால் இருத்தல் எனும் தொழிற்பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இருப்பியல், இருத்தலியல் குழப்பத்தைத் தவிர்க்க, existance-நிலவல், நிலவுகை எனக் கொண்டு நிலவலியல் என Ontology ஐக் குறிப்பிடலாம்.இருப்பியல் எனபதும் சரியே.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு)

எனவே, கட்டுரையின் தலைப்பை நிலவலியல்/ இருப்பியல் என மாற்ரி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:54, 20 அக்டோபர் 2016 (UTC)Reply

பகுப்பும் சரியல்ல. இது கோட்பாடல்ல. மெய்யியலின் ஒரு அறிவுப் பிரிவு அல்லது புலம் ஆகும். எனவே பகுப்பு:மெய்யியல் புலங்கள் என மாற்றப் படுகிறது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:49, 20 அக்டோபர் 2016 (UTC)Reply

அறிவின் அடிநாதம் தொகு

"ஒன்றைப் பற்றி அறிய அதன் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களைப் பற்றி அறிவதும், அவைகளுக்கிடையே உள்ள அடிப்படை உறவுக்கூறுகளை அறிவதும் ஒன்றைப் பற்றி புரிந்து கொள்ள உதவும் அல்லவா? இதனாலேயே, அடிப்படை சொற்களையும், அச்சொற்களின் பொருள்களையும் வரையறை செய்து ஓர் அறிவுப்புலத்தை வரையறை செய்யும் இயலை" - இது பற்றி வெகு விரிவாக "அறிவின் அடிநாதம்" http://intellectualexpress.wordpress.com/ தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

Return to "உள்ளியம் (மெய்யியல்)" page.