பேச்சு:உள் எரி பொறி
உள்வாங்கு (அ) உள்ளிழு வீச்சு, அமுக்கு வீச்சு, திறன்வீச்சு, கழிவகற்று வீச்சு என்று சொல்லலாம். --செல்வா 19:43, 14 ஜூன் 2008 (UTC)
நான்கு இயங்கு நிலைகள்
தொகுஇயங்கு நிலை 1: உள்வாங்கிஉள்வாங்கு வீச்சு (Intake)
தொகு
உள்ளே எரிவளிமமும் சிறிது காற்றும் கலந்து பாய்வதற்கு வழி ஒன்று வைத்து இருக்கிறார்கள். உந்தி நகர்ந்து உந்தறையில் இடம் பெரியதாகும் பொழுது, எரிவளிமமும், காற்றும் உந்தறைக்குள்ளே இழுக்கப்பட்டு நுழையும். இதற்கு உள்வாங்கி வீச்சு என்று பெயர்.
இயங்கு நிலை 2: அமுக்கழுத்த வீச்சு (Compression)
தொகுஅடுத்ததாக, உந்தி உந்தறைக்குள் நகர்ந்து எரிவளிமம் உள்ள இடத்தைச் சுருக்குவதால், உள்ளிருக்கும் எரிவளைமம் வெகுவாக அமுக்கப்பட்டு அழுத்தம் கூடுகின்றது. எனவே இதற்கு அமுக்கழுத்த வீச்சு என்று பெயர்.
இயங்கு நிலை 3: திறன் தரும் வீச்சு (Power (Combusion))
தொகு
இவ்வாறு எரிவளிமம் அழுத்தப்படும் பொழுது, ஓரளவுக்கு மேல் அழுத்தம் மீறினால், இவ்வளிமம் சட்டென்று தீப்பற்றி எரியத் தொடங்கும். அப்படி எரியத்தொடங்கும் வளிமம் விரிவடையத் தொடங்குகிறது. அப்பொழுது உந்தியை வலுவாய் தள்ளி தன் இடத்தை விரிவடையச் செய்யும். இதுதான் திறன் தரும் வீச்சு.
இயங்கு நிலை 4: கழிவகற்றும் வீச்சு (Exhaust)
தொகு
எரிவளிமம் எரிந்தவுடன், அதிலுள்ள ஆற்றல் ஒடுங்கிவிடும், எனவே, எரிந்து மீதமுள்ள கழிவு வளிமங்களை (இவை இன்னமும் சூடாக இருக்கும்) உந்தி நகர்ந்து அமுக்கி உந்தறையோடு இணைக்கப்பட்ட ஒரு கழிவாய் குழாயின் வழியாக தள்ளிவிடும். இதுதான் கழிவகற்றும் வீச்சு.
மேற்கண்ட நான்கு இயங்கு நிலைகளில் திறன் தரும் வீச்சில் எரிபொருளைப் பயன்படுத்தி பிறப்பிக்கப்படும் ஆற்றலை வைத்தே மற்றைய மூன்று இயங்கு நிலைகளும் நடைபெறுகின்றன. (சில திருத்தங்கல் செய்துள்ளேன் ---செல்வா 19:43, 14 ஜூன் 2008 (UTC)) --செல்வா 22:02, 14 ஜூன் 2008 (UTC)