பேச்சு:எங்கள் குடும்பம் பெரிசு

எங்கள் குடும்பம் பெரிசு என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரையிலுள்ள முழுத் தகவலுக்குமே ஒரே மேற்கோள் எனும்போது வரிக்கு வரி citation கொடுப்பது அவசியமற்றது. இதற்கு முன் எழுதிய கட்டுரைகளிலும் இவ்வாறே கொடுத்துள்ளேன். மேலும், நான் அவதானித்தவரையில் பல கட்டுரைகளில் இவ்வாறு சான்று கொடுக்கப்பட்டுள்ளது. எ-கா ஆறு அழகப்பன் என்ற கட்டுரை. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் எழுதிய நூல்கள் விற்பன செய்யப்படும் ஒரு பக்கம் கூட உசாத்துணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுரையில் எங்குமே வரிகளுக்குப் பக்கத்தில் citation கொடுக்கப்படவில்லை. கட்டுரை உருவாக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் ஒருவரும் சான்று பற்றிக் கேள்வி எழுப்பவில்லை. இந்தக் கட்டுரையைப் பார்த்துத் தான் நான் இவ்வாறு இறுதியில் ஒரே இடத்தில் மேற்கோள் கொடுக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கினேன். --Uksharma3 10:03, 22 அக்டோபர் 2016 (UTC) Reference என்பதையே நான் மேற்கோள்கள் எனக் கொடுத்துள்ளேன். அது தவறான சொல்லானால் சான்று என மாற்றலாம். இது அடிக்குறிப்பு Footnote அல்ல --Uksharma3 10:08, 22 அக்டோபர் 2016 (UTC)

ஒரே ஒரு உசாத்துணையுடன் கட்டுரை எழுதப்படும் போது நீங்கள் குறிப்பிட்டவாறு உசாத்துணை தரலாம். ஆனால், அதற்கு மேற்கோள் எனத் தலைப்பிடாமல், உசாத்துணை எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 10:14, 22 அக்டோபர் 2016 (UTC)Reply
கட்டுரையைப் படித்துப் பார்த்தேன். முழுவதும் பாட்டுப் புத்தகத்தில் தந்திருக்க மாட்டார்கள். பொதுவாக பாடல்கள், கதைச்சுருக்கம், நடிகர்கள் மற்றும் ஏனைய பங்களிப்பாளர்கள் விபரங்களைத் தான் தருவார்கள். தயாரிப்பு விபரம் தந்திருக்க மாட்டார்கள். எனவே, மேற்கோள்கள் எனத் தருவதே சரியான முறை. தயாரிப்பு விபரத்திற்கு மேற்கோள் தந்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:27, 22 அக்டோபர் 2016 (UTC)Reply
மிக்க நன்றி --Uksharma3 10:32, 22 அக்டோபர் 2016 (UTC)
Return to "எங்கள் குடும்பம் பெரிசு" page.