பேச்சு:எட்கர் ரைசு பர்ரோசு
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
Untitled
தொகுஎட்கர் ரைசு பர்ரோசு என்று மாற்றலாமா? இந்தக் கடைசி சு குற்றியலுகரம், ஆகவே ஏறத்தாழ ஒலிப்பு ஒன்றே. மேலும், உண்மையிலேயே வாய்விட்டுச் சொல்லிப்பாருங்கள், rice முதலானவற்றில் கடைசியில் சிறிதளவு உயிரொலி இருக்கும். மார்ச் என்று எழுதினாலும், சொல்லும்பொழுது மார்ச்சு என்று சிறிதளவு உயிரொலி கடை மெய் ச்-க்கு அடுத்து வரும். இதனை எல்லாம் தமிழர்கள் நுணுகி ஆய்ந்தாக்கிய முறை. சற்றே எளிமைப்படுத்த (மார்ச்சு என்பதுபோல எழுதும்) முறைமைகள் வகுத்துள்ளார்கள். பலரும் தமிழின் ஒலிப்பு நுட்பத்தையும் முறைமையையும் அறியாமல் தவறாக எழுதிப் பரப்பி வருகிறார்கள். அருள்கூர்ந்து ரைசு, பர்ரோசு என்று எழுத வேண்டுகிறேன். --செல்வா 14:12, 28 அக்டோபர் 2010 (UTC)