பேச்சு:எமிலி அல்லது கல்வி பற்றி (நூல்)

இந்த நூலில் ஐந்து பகுதிகளிலும் சேர்ந்து மொத்தம் 1749 சிறு சிறு பத்திகள்தாம் உள்ளன. ஆளுக்கு ஒரு நாளைக்கு வெறும் 2 பத்திகளை மொழிபெயர்த்தாலே 20 பேர் 43 நாட்களில் முழுவதுமாக பெயர்த்துவிடலாம். ஒரு குட்டி திட்டம் வகுத்து ஆளுக்கு 2 பத்திகள் பெயர்க்கலாமா? :) விக்கிமூலத்தில் விக்கிநூலில் செய்யலாம். முழு நூலும் பல இடங்களில் கிட்டுகின்றன. பல முகனையான நூல்களை நாம் தமிழில் பெயர்க்காமல் இருக்கின்றோம்! கல்லூரி மாணவர்கள் குட்டித் திட்டமாக மிக எளிதாக இதனைச் செய்ய இயலும். பல்கலைக்கழகங்கள் கவனிக்குமா? :

  • Émile, ou De l'éducation விக்கிமூலம் (பிரான்சிய மொழிமூலம்)
  • The Emile of Jean-Jacques Rousseau, கொலம்பியா பல்கலைக்கழகம். முழு பிரான்சிய மொழி முதல்நூலும், ஆங்கில மொழி பெயர்ப்பும். மொழிபெயர்ப்பு கிரேசு உரூசெவெல்ட்டு (Grace G. Roosevelt) (பார்பரா ஃவாக்சிலி (Foxley) மொழிபெயர்ப்பைத் தழுவியது)
  • Emile at குட்டன்பேர்க் திட்டம் கூட்டன்பெர்கு திட்டத்தில் பார்பரா ஃவாக்சிலியின் மொழிபெயர்ப்பு.

--செல்வா (பேச்சு) 16:06, 3 சூலை 2012 (UTC)Reply

நிச்சயம் நான் விக்கிமூலத்தில் முடிந்தவரை பங்களிக்கிறேன். --இராச்குமார் (பேச்சு) 16:09, 3 சூலை 2012 (UTC)Reply

நன்றி இராச்குமார்! நம் இருவரைப் போல் இன்னும் ஒரு 8-10 பேர் சேர்ந்தால் ஒரு சிறு முயற்சியாகத் தொடங்கலாம். இவ்வகையான நூல்கள் தமிழில் துல்லியமான மொழிபெயர்ப்பில் கிடைக்கவேண்டும். --செல்வா (பேச்சு) 16:16, 3 சூலை 2012 (UTC)Reply

செல்வா, கட்டுரைக்கும் நூல் பற்றிய அறிமுகத்துக்கும் நன்றி. உடனே, எனது ஆண்டிராய்டு பேசியில் இறக்கிப் படிக்கத் தொடங்கி உள்ளேன். இது போல் கூட்டன்பேர்கு அல்லது அதைப் போன்ற இடங்களில் இருந்து இலவசமாக இறக்கிப் படிக்கக் கூடிய முக்கிய நூல்களுக்கான பரிந்துரையைத் தர முடியுமா? நிற்க :)

கலைக்களஞ்சியக் கட்டுரை எழுதுவது போலவே நூல்களை மொழிபெயர்ப்பதும் ஒரு கலை. மூலக் கருத்தும் வழங்கு மொழியின் மரபும் குலையாமலும் அதே வேளை ஈடுபாட்டுடன் படிக்கத்தூண்டும் எழுத்து நடையும் வேண்டும். எனவே, பலர் ஒட்டு மொத்தமாக இது போன்ற முயற்சிகளில் இறங்கினால் வாசிப்பு பாதிக்கப்படலாம் என்று ஒரு கவலை. அதே வேளை, விக்கிநூல்களை இது போன்ற மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்குக் களமாகக் கொள்ளலாம் என்பது மிக அருமையான தூண்டல். கண்டிப்பாகச் செய்வோம்.--இரவி (பேச்சு) 20:07, 3 சூலை 2012 (UTC)Reply

Return to "எமிலி அல்லது கல்வி பற்றி (நூல்)" page.